Video | தன்னைத்தானே கல்லால் தாக்கிக்கொண்டு போலீசார் அடித்ததாக குற்றம் சாட்டிய பாஜக எம்.எல்.ஏ..!

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட அனைத்து வீடியோவையும் போலீசார் வெளியிட தயாரா? என்று எம்.எல்.ஏ ராஜா சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

news18
Updated: June 21, 2019, 11:43 AM IST
Video | தன்னைத்தானே கல்லால் தாக்கிக்கொண்டு போலீசார் அடித்ததாக குற்றம் சாட்டிய பாஜக எம்.எல்.ஏ..!
எம்.எல்.ஏ ராஜா சிங்
news18
Updated: June 21, 2019, 11:43 AM IST
போராட்டத்தின் போது போலீசார் தன்னை தாக்கியதாக தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ குற்றம் சாட்டிய நிலையில், உண்மையான வீடியோ காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் கோஷமாஹல் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜா சிங். ஜும்மெராத் பஸார் அருகே, சுதந்திரப்போராட்ட வீராங்கனை அவந்தி பாய் லோத்-தின் சிலையை, அவர் நிறுவ முயன்றார்.

முக்கிய பகுதியில் சிலை வைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என்று கூறி நகராட்சி நிர்வாகம் அங்கு சிலைகள் வைக்க தடை விதித்திருந்தது. தடையை மீறி அவர் சிலை வைத்ததால், போலீசார் உதவியுடன் நகராட்சி ஊழியர்கள் சிலையை அப்புறப்படுத்தினர்.

அப்போது, போலீசாருக்கும் எம்.எல்.ஏ ராஜா சிங் உடன் வந்த கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி கைக்கலப்பானது. இதனை அடுத்து, தலையில் பெரிய கட்டுடன் போலீசார் தன்னை தாக்கி மண்டையை உடைத்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.

இதனை அடுத்து, சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை போலீசார் வெளியிட்டனர். அதில், பெரிய கல்லால் தன்னைத்தானே எம்.எல்.ஏ தாக்கிக்கொண்டது தெரிய வந்தது. இதனால், அவர் மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானார்.



எனினும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட அனைத்து வீடியோவையும் போலீசார் வெளியிட தயாரா? என் மீதும் கட்சியினர் மீதும் போலீசார் லத்திசார்ஜ் நடத்திய வீடியோவை வெளியிட வேண்டும். குறிப்பிட்ட வீடியோவை மட்டும் வெளியிட வேண்டாம் என்று ராஜா சிங் கூறியுள்ளார்.

First published: June 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...