Home /News /national /

சட்டமன்றத்திற்குப் பசுவுடன் வந்த பாஜக எம்.எல்.ஏ - கூட்டத்தில் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு...

சட்டமன்றத்திற்குப் பசுவுடன் வந்த பாஜக எம்.எல்.ஏ - கூட்டத்தில் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு...

 பசுவுடன் வந்த பாஜக எம்.எல்.ஏ  சுரேஷ் சிங் ராவத்

பசுவுடன் வந்த பாஜக எம்.எல்.ஏ சுரேஷ் சிங் ராவத்

ராஜஸ்தானில் பாஜக எம்.எல்.ஏ சுரேஷ் சிங் ராவத் சட்டமன்றத்திற்கு அழைத்து வந்த பசு அங்கிருந்து அலறியடித்து ஓடியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rajasthan, India
    ராஜஸ்தானில் பசுவைத் தாக்கும் தோல் நோய் தொடர்பாக அரசின் கவனத்தை  ஈர்க்க சட்டமன்ற கூட்டத்திற்கு பாஜக எம்.எல்.ஏ சுரேஷ் சிங் ராவத் பசுவைக் கூட்டுக்கொண்டு வந்துள்ளார். அந்த வேளையில் அவரை செய்தியாளர்கள் சூழ்ந்துகொள்ளப் பசு அலறியடித்து ஓடியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் பகுதியின் சட்டமன்ற உறுப்பினராக  பாஜகவைச் சேர்ந்த சுரேஷ் சிங் ராவத் உள்ளார்.  அம்மாநிலத்தில் அதிகரித்து வரும் பசு நோய்க்கு அரசின் கவனம் ஈர்க்க சட்டமன்றத்திற்கு  பசுவைக் கூட்டிக்கொண்டு சுரேஷ் சிங் ராவத் சென்றுள்ளார். இந்த நிலையில் அவரை சட்டமன்றத்தில் நுழைவதற்கு முன்பே செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர்.

    சுரேஷ் சிங் ராவத் செய்தியாளர்களிடம் பேசத் தொடங்கியுள்ளார். அப்போது, கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல், செய்தியாளர்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்து காவல் விசில் சத்தம் போன்றவற்றின் காரணத்தினால் அவர் அழைத்து வந்த பசு அந்த இடத்திலிருந்து அலறியடித்து ஓடியுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், உணர்வற்ற அரசைப் பார்த்துப் பசு கூட கோபம் அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தானில் பசுக்களுக்குத் தோள் நோய் பரவி வரும் நிலையில், பசுவை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பெருமளவு பாதிப்பு அடைக்கின்றனர். அவர்களுக்குத் தகுந்த நஷ்டஈடு வழங்குமாறு அரசிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவர் எம்.எல்.ஏ நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கியதாகவும், ஆனால் அது முழுமையாக விவசாயிகளுக்குப் போய்ச் சேரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.



    தோள் நோய் காரணத்தினால் லட்சக் கணக்கில் பசுக்கள் இறந்துவிட்டதாகவும், அதனால் பசுவின் பாலை விற்கும் வியாபாரிகள் மிகவும் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    Also Read : இனி விண்வெளிக்கே டூர் போகலாம்... விண்வெளி பயணத்தை தொடங்கும் சீனா!

    இரண்டாம் முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சுரேஷ் சிங் ராவத், அரசின் கவனம் ஈர்க்க இந்த மாதிரியான செயல்களைச் செய்வது இது முதல் முறை இல்லை. 2019ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் விவசாயிகளின் கடனை ரத்து செய்யக்கோரி உழவு ஏரை தோளில் தூக்கிக்கொண்டு சட்டமன்றத்திற்கு வந்திருந்தார்.

    அதே போல் 2020ம் ஆண்டு விவசாயிகளுக்கு மின் கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி சட்டமன்றத்திற்கு மின் கம்பத்தைத் தோளில் ஏந்திக் கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Janvi
    First published:

    Tags: BJP MLA, Cow, Cow Milk

    அடுத்த செய்தி