தவறான முகவரி… அதிர்ந்துபோன ராணுவ வீரரின் குடும்பம்… சங்கடத்தில் ஆழ்ந்த மத்திய அமைச்சர்! நடந்தது என்ன?

மத்திய அமைச்சர் திடீரென அவர்களின் வீட்டிற்கு வந்து விசாரித்தபோது குழப்பமடைந்து அதிர்ந்துபோனதாகவும் ரவிக்குமாரின் மனைவி தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் திடீரென அவர்களின் வீட்டிற்கு வந்து விசாரித்தபோது குழப்பமடைந்து அதிர்ந்துபோனதாகவும் ரவிக்குமாரின் மனைவி தெரிவித்தார்.

  • Share this:
கர்நாடகா: நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர் ஒருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிப்பதற்காக சென்ற மத்திய அமைச்சர், தவறான முகவரியில் உயிருடன் இருக்கும் வேறொரு ராணுவ வீரரின் வீட்டிற்குச் சென்று இரங்கல் தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சர் நாராயணசாமி கடந்த 19ஆம் தேதி பாஜகவின் ஜன் ஆசிர்வாத் யாத்திரையின் ஒரு பகுதியாக உயிர்நீத்த ராணுவ வீரரின் வீட்டிற்குச் சென்று இரங்கல் தெரிவிப்பதற்கு பதிலாக தற்போது சேவையில் இருக்கும் ராணுவ வீரர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றது தெரியவந்துள்ளது.

மத்திய அமைச்சர் நாராயணன்


அது மட்டுமில்லாமல், அந்த ராணுவ வீரரின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிலம் வழங்கப்படும் என்று பாஜகவின் அமைச்சர் கூறியதால் குழப்பமடைந்த குடும்பத்தினர் ராணுவத்தில் சேவையில் இருக்கும் தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்துவிட்டதாக நினைத்து அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு அழ தொடங்கிவிட்டனர்.

Also Read | தற்கொலை செய்துகொண்ட பெண்… பின்னணியில் காதலன் குடும்பம்- தீவிரமாகும் விசாரணை!

அதை தொடர்ந்து தான் தவறான முகவரிக்கு வந்ததை உணர்ந்த மத்திய அமைச்சருக்கு இச்சம்பவம் பெரும் சங்கடமான தருணத்தை ஏற்படுத்தியது. அமைச்சரின் அன்றைய அட்டவணையின்படி, கர்நாடகாவில் கடக் மாவட்டத்தில் முல்குண்ட் என்ற பகுதியில் உள்ள ஒரு உயிர்நீத்த வீரரின் இல்லத்திற்கு அமைச்சர் செல்லவிருந்தார். எனினும், தவறுதலாக அவர் ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தில் பணிப்புரிந்து வரும் ராணுவ வீரர் ரவிக்குமார் கட்டிமணி என்பவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். நேரமின்மை காரணமாக, அவசர அவசரமாக அவர் ஹவேரி பாஜக எம்பி சிவக்குமார் உதேசி உதவியுடன் முல்குண்ட் பகுதிக்கு வந்திருக்கிறார். அப்போது, தவறுதலாக மேறொரு ராணுவ வீரரின் வீட்டிற்குச் சென்று இரங்கல் தெரிவித்து குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து விசாரித்ததால் ரவிக்குமாரின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் குழப்பமடைந்தனர்.

Also Read | சுதந்திர தினத்தன்று சாலையில் கொலை செய்யப்பட்ட மாணவி- சிசிடிவியால் சிக்கிய குற்றவாளி!

எனினும், குழப்பம் நீங்கியவுடன், அந்த குடும்பத்தை ஏற்கெனவே அறிந்த உள்ளூர் பாஜக உறுப்பினர் ஒருவர், ராணுவ வீரர் ரவிக்குமாருக்கு உடனடியாக வீடியோ அழைப்பு விடுத்து மத்திய அமைச்சரிடம் பேசுமாறு கூறினார். தனது தவறை உணர்ந்த நாராயணசாமி, ராணுவ வீரரின் சேவையைப் பாராட்டி நடந்த சங்கடமான சூழலை சரி செய்ய முயற்சித்து அங்கிருந்து வெளியேறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இச்சம்பவம் குறித்து ராணுவ வீரர் ரவிக்குமார் கட்டிமணியின் மனைவி கூறும்போது, தங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்கள்தான் ஆவதாகவும், தனது கணவர் காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், மத்திய அமைச்சர் திடீரென அவர்களின் வீட்டிற்கு வந்து விசாரித்தபோது குழப்பமடைந்து அதிர்ந்துபோனதாகவும் தெரிவித்தார். தவறான தகவலை அளித்து அவரை சங்கடத்திற்குள்ளாக்கிய பாஜக தலைவர்களை மத்திய அமைச்சர் நாராயணன் கடுமையாக கடிந்துக்கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Published by:Archana R
First published: