நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் மாட்டிறைச்சி உண்பவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவம் நடந்துவருவது வாடிக்கையாகி வரும் நிலையில், ஆர்எஸ்எஸ், பாஜக அரசு மக்களின் உணவு சுதந்திரத்தில் தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து, மேகாலயாவில் புதிதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக பதவியேற்ற சன்போர் சுலாய், பாஜக மாட்டிறைச்சிக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில், அதிகமாக மாட்டிறைச்சி சாப்பிடுங்கள் என்று அவர் மக்களை ஊக்குவித்துள்ளார்.
Also read: அண்ணாமலை போராட்ட அறிவிப்புக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலடி!
மேகாலயாவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. அங்கு முதல்வராக கான்ராட் சங்மா உள்ளார். இந்நிலையில், புதிதாக அமைச்சர் பதவியேற்ற சன்போர் சுலாய், செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, கோழி, மட்டன், மீனை விட மக்களை அதிக மாட்டிறைச்சி சாப்பிட நான் ஊக்குவிக்கிறேன்.
மக்களை அதிக மாட்டிறைச்சி சாப்பிட ஊக்குவிப்பதன் மூலம், பசு வதைக்கு பாஜக தடை விதிக்கும் என்ற கருத்து மாற்றப்படும் என்று அவர் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் பேசுவதாகவும், அண்டை மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய பசு சட்டத்தால் மேகாலயாவிற்கு கால்நடை போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் உறுதியளித்தார்.
மேகாலயா, அசாம் மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினை இருக்கிறது. எங்களின் எல்லை எந்தவிதத்திலும் ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.