முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு கோஷம்: பாஜக-வினர் கைது

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு அஸ்வினி உட்ப்ட 6 பாஜகவினர் கைது

கடந்த ஞாயிறன்று டெல்லி ஜந்தர் மந்தரில் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான, வன்முறை கோஷங்களை எழுப்பிய பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாய் உட்பட 6 பேரை போலிசார் கைது செய்தனர்.

 • Share this:
  கடந்த ஞாயிறன்று டெல்லி ஜந்தர் மந்தரில் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான, வன்முறை கோஷங்களை எழுப்பிய பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாய் உட்பட 6 பேரை போலிசார் கைது செய்தனர்.

  அஸ்வினி உபாத்யாய்தான் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர், அவரைக் கைது செய்து போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

  இந்த காட்டுத்தனமான முஸ்லிம் எதிர்ப்பு கோஷம் சமூக ஊடகங்களில் பிரதிபலிக்க டெல்லி போலீசார் அஸ்வினி உபாத்யாயை கனாட் பிளேஸ் காவல் நிலையத்துக்கு வருமாறு உத்தரவிட்டனர். இவரோடு சேர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக கோஷம் எழுப்பிய வினோத் ஷர்மா, தீபக் சிங், தீபக், வினித் கிரந்தி, பிரீத் சிங், ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவின் படி, ராம் ராம் என்று கோஷமிட்டனர். இதோடு இந்தியாவில் இருக்க வேண்டுமெனில் ஜெய் ஸ்ரீராம் சொல்லியே ஆக வேண்டும் என்று கோஷமிட்டனர். நாடாளுமன்றத்திலிருந்து சிறிது தூரத்தில்தான் இத்தகைய கோஷம் பாரதத் தலைநகரில் நடைபெற்றுள்ளது.

  இதில் அஸ்வினி உபாத்யாய் முதலில் கைது செய்யப்படவில்லை, ஆனால் இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தவுடன் போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு டெல்லி அரசு கோவிட் காரணமாக தடை விதித்திருந்தது. டிவி நடிகர் பாஜக தலைவர் கஜேந்திர குமாரும் இந்த முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் அவர் வீடியோ கிள்ப்களில் காணப்படவில்லை.

  ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக கோஷமே எழுப்பவில்லை என்று அஸ்வினி மறுத்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: