வட்டியில்லா கிசான் கிரெடிட் கார்டு; பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள் என்னென்ன?

BJP Manifesto 2019 | “2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்க உறுதியளிக்கிறோம். தேவைப்பட்டால் விவசாயிகளுக்குக் கூடுதல் உதவிகளையும் அளிப்போம்”

news18
Updated: April 8, 2019, 1:24 PM IST
வட்டியில்லா கிசான் கிரெடிட் கார்டு; பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள் என்னென்ன?
பாஜக தேர்தல் அறிக்கை
news18
Updated: April 8, 2019, 1:24 PM IST
2019 மக்களவைத் தேர்தல் அறிக்கையை முன்னிட்டு பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்று இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.

விளை பொருட்களைப் பதப்படுத்தும் சேமிப்பு கிட்டங்களை நாடு முழுவதும் நிறுவி அவற்றை ஒன்றாக இணைக்கும் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படும். விவசாயிகள் விளைச்சலை அதிகரிக்க 25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

தற்போது கிசான் கிரெடிட் கார்டு திட்டங்கள் கீழ் வாங்கப்படும் கடனுக்கு 7 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும் என்றுள்ளது. பாஜக வெற்றிபெற்றால் கிசான் கிரெடிட் கார்டு கீழ் வாங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.

விவசாயிகளுக்குப் பிற்காலங்களில் மூன்று தவணையாக ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது உள்ள வரம்புகள் நீக்கப்பட்டு அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

விவசாயிகள் ரூ. 1 லட்சம் வரையிலான கடனை 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்தும் போது 0% வட்டி விகிதத்தில் கடன். 60 வயதுக்கும் அதிகமான சிறு, குறு விவசாயிகளுக்கு பென்ஷன்.

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்க உறுதியளிக்கிறோம். தேவைப்பட்டால் விவசாயிகளுக்குக் கூடுதல் உதவிகளையும் அளிப்போம்” என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க:
Loading...

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...