ஐந்து கோடி வேலை வாய்ப்பு; சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது! பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கை

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு தனித் தனி அமைச்சகம். 16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மராத்வாடா குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும்.

ஐந்து கோடி வேலை வாய்ப்பு; சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது! பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கை
பா.ஜ.க தேர்தல் அறிக்கை
  • News18
  • Last Updated: October 15, 2019, 4:54 PM IST
  • Share this:
வீர் சாவர்க்கர், ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று மஹாராஷ்டிரா பா.ஜ.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அக்டோபர் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனைமுன்னிட்டு, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மஹாராஷ்டிரா மாநில பா.ஜ.க சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையை பா.ஜ.க தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, அம்மாநில முதல்வர் தேவேந்திரநாத் பட்னவிஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில், ‘மாநிலத்தை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்டதாக வளர்த்தெடுப்போம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து கோடி வேலை வாய்ப்புகள். 2022-ம் ஆண்டுக்குள் அனைவரும் வீடு. மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு தனித் தனி அமைச்சகம். 16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மராத்வாடா குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும்.


ஜோதிபா பூலே, சாவித்ரிபா பூலே, வீர் சாவர்க்கர் ஆகியோருக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்கவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மஹாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு குற்றத்துக்கு போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டவர் வீர் சாவர்க்கர்.

Also see:

First published: October 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading