மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சிமைக்க முயன்றது வெட்கக்கேடானது... சோனியாகாந்தி!

மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சிமைக்க முயன்றது வெட்கக்கேடானது... சோனியாகாந்தி!
சோனியா காந்தி
  • News18
  • Last Updated: November 28, 2019, 3:41 PM IST
  • Share this:
மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சியமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் குழு கூட்டம் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சோனியாகாந்தி, லாபம் தரக் கூடிய பொதுத்துறை நிறுவன பங்குகளை பிரதமர் மோடி தனது நண்பர்களுக்கு விற்பனை செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.

காஷ்மீருக்குள் ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள் குழு ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டாலும், இந்தியாவின் அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், இது பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் வெட்கக்கேடான செயல் என்றும் ஆவேசமாகக் கூறினார்.


முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதன் மூலம் மோடி அரசு அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டதாகவும் சோனியா காந்தி காட்டமாகக் கூறினார்.

Also see...
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்