மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த கவுன்சிலர்கள்!

பாஜக

பாஜக அதிருப்தியாளர்களான 27 உறுப்பினர்கள் கட்சி மாறி சிவசேனா வேட்பாளரான ஜெய்ஸ்ரீக்கு வாக்களித்துள்ளனர்

  • Last Updated :
  • Share this:
மகாராஷ்டிராவின் ஜல்கோனில் நடைபெற்ற மேயர் தேர்தலில் 27 கவுன்சிலர்கள் கட்சி மாறி வாக்களித்ததால் பெரும்பான்மை பலம் கொண்ட பாஜக தோல்வியை சந்திக்க நேரிட்டுள்ளது. பாஜக அதிருப்தி கவுன்சிலர்களின் ஆதரவுடன் சிவசேனா ஜல்கோன் மாநஜராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்றது.

மகாராஷ்டிராவின் ஜல்கோன் மாநகராட்சியானது பல ஆண்டுகாலமாக பாஜகவின் கோட்டையாக விளங்கி வருகிறது. மொத்தம் 75 உறுப்பினர்களை கொண்ட ஜல்கோன் மாநகராட்சியில் பாஜக 57 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை பெற்று உள்ளது. இதனிடையே ஜல்கோன் மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் சிவசேனாவின் வேட்பாளர் ஜெய்ஸ்ரீ மகாஜன் 45 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக அதிருப்தியாளரான குல்பூஷன் பாட்டீல் துணை மேயராக தேர்வாகி உள்ளார்.

வெற்றி பெற்ற ஜெய்ஸ்ரீ மகாஜன் சிவசேனாவின் 15 வாக்குகளை பெற்றார். ஓவைசியின் AIMIM கட்சி உறுப்பினர்கள் மூவரும் அவருக்கு வாக்களித்தனர். அதே நேரத்தில் பாஜக அதிருப்தியாளர்களான 27 உறுப்பினர்கள் கட்சி மாறி சிவசேனா வேட்பாளரான ஜெய்ஸ்ரீக்கு வாக்களித்துள்ளனர். இதன் மூலமே அவர் வெற்றி பெற்றார்.

சொந்த கட்சியினரே வாக்களிக்காததால் பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட பிரதீபா கபாசே 30 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

ஜல்கோன் மாநகராட்சி தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவரான ஏக்நாத் கட்சே பாஜக கவுன்சிலர்கள் அனைவரும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அதிருப்தியில் உள்ளனர். அக்கட்சியின் சொந்த கவுன்சிலர்களே கட்சிக்கு பாடம் புகட்டியுள்ளனர் என பேசினார். ஏக்நாத் கட்சே கடந்த அக்டோபரில் பாஜகவில் இருந்து தேசியவாத காங்கிரஸுக்கு கட்சி மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: