• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.6,000 ஊதியம் பெற்றவர் இன்று ரூ.50,000 சம்பாதிக்கிறார், பெட்ரோல் விலை மட்டும் மாறாமல் இருக்குமா?- பாஜக தலைவர் பேச்சுக்கு காங். பதிலடி

10 ஆண்டுகளுக்கு முன் ரூ.6,000 ஊதியம் பெற்றவர் இன்று ரூ.50,000 சம்பாதிக்கிறார், பெட்ரோல் விலை மட்டும் மாறாமல் இருக்குமா?- பாஜக தலைவர் பேச்சுக்கு காங். பதிலடி

கபில் சிபல்.

கபில் சிபல்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா, 10 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் ரூ.6 ஆயிரம் ஊதியம் பெற்றார், அவர் தற்போது ரூ.50 ஆயிரம் பெறுகிறார். அப்படியிருக்கும்போது பெட்ரோல், டீசல் விலை மட்டும் பழைய விலையில் விற்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று பேசியதற்கு காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார்.

  • Last Updated :
  • Share this:
    மத்தியப் பிரதேச மாநிலத்தின் கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா, 10 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் ரூ.6 ஆயிரம் ஊதியம் பெற்றார், அவர் தற்போது ரூ.50 ஆயிரம் பெறுகிறார். அப்படியிருக்கும்போது பெட்ரோல், டீசல் விலை மட்டும் பழைய விலையில் விற்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று பேசியதற்கு காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கூறும்போது, “பாஜக தலைவர்கள், அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் நிதர்சன உலகில் இல்லை. அதனால்தான் இதுபோன்ற கருத்துகளைக் கூறுகிறார்கள். மகேந்திர சிங் சிசோடியா கூறுகிறார், ரூ.6 ஆயிரம் ஊதியம் பெற்றவர். தற்போது ரூ.25 ஆயிரம் பெறுகிறார் என்றார். இது கொடூரமான நகைச்சுவை. பாஜக தலைவர்கள், அமைச்சர்களின் வருமானம் மட்டும்தான் உயர்ந்துள்ளது. சாமானிய மக்களின் வருமானம் உயரவில்லை.

    மத்தியில் ஆளும் பாஜக அரசின் வீழ்ச்சி விரைவில் நடக்கும். உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும்போது மத்தியில் ஆளும் பாஜக அரசின் வீழ்ச்சி தொடங்கும். பெட்ரோல் டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆனால், மத்திய அரசு ஏழைகளைப் பற்றிச் சிந்திக்காமல் மத அரசியலைப் பற்றி மட்டுமே யோசிக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் தோல்வி, மத்தியில் அந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்'” என்றார்.

    முன்னதாக பாஜக தலைவர் சிசோடியா கூறும்போது, “விலை உயர்வைப் பற்றி மக்கள் குறைக் கூறக் கூடாது. அனைத்து மக்களின் வருமானமும் உயர்ந்துள்ளது. சாமானிய மக்களின் வருமானம் உயராமல் இருக்கிறதா? அனைத்தையும் இலவசமாக அரசால் வழங்க முடியாது.

    வருமானம் உயரும்போது, மக்கள் விலைவாசி உயர்வையும் புரிந்துகொண்டு ஏற்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் ரூ.6 ஆயிரம் ஊதியம் பெற்றார், அவர் தற்போது ரூ.50 ஆயிரம் பெறுகிறார். அப்படியிருக்கும்போது பெட்ரோல், டீசல் விலை மட்டும் பழைய விலையில் விற்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அது சாத்தியமில்லை” என்று அவர் பேசியதற்குத்தான் கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதற்கிடையே பெட்ரோல் விலை டெல்லியில் லிட்டருக்கு ரூ.110-ஐயும் கடந்து செல்ல மும்பையில் ரூ.115 ஆக அதிகரித்துள்ளது. ஓட்டல்கள், தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை, சில இடங்களில் முதல் முறையாக ரூ. 2 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.

    சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ 106.66 ஆகவும் , டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ102.59 ஆகவும் உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: