சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்து சர்ச்சையில் சிக்கியவருக்கு துணை முதல்வர் பதவி!

அந்தச் செய்தியை லக்ஷ்மண் சாவடி, மறுத்தநிலையில், அவர்கள் ஆபாசப் படம் பார்க்கும் வீடியோ காட்சிகள் செய்திகளில் வெளியானது.

சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்து சர்ச்சையில் சிக்கியவருக்கு துணை முதல்வர் பதவி!
லக்ஷ்மண் சாவடி
  • News18
  • Last Updated: August 27, 2019, 3:24 PM IST
  • Share this:
கர்நாடக சட்டப்பேரவையில் அமைச்சராக இருந்தபோது ஆபாசப் படம் பார்த்து சிக்கியவர், தற்போது எடியூரப்பா அமைச்சரவையில் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த லக்ஷ்மண் சாவடி, 2012-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, சட்டப்பேரவையில் வைத்து சக அமைச்சர்களுடன் சேர்ந்து ஆபாசப் படம் பார்த்தது ஊடகங்களில் செய்தியானது. அந்தச் செய்தியை லக்ஷ்மண் சாவடி, மறுத்தநிலையில், அவர்கள் ஆபாசப் படம் பார்க்கும் வீடியோ காட்சிகள் செய்திகளில் வெளியானது.

இந்தச் சம்பவம் பா.ஜ.கவுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வுக்கு பிறகு, அவர்கள் பெரிய அளவில் பொதுநிகழ்வில் பங்கேற்காமல் இருந்துவந்தனர்.


சட்டசபையிலும் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், எடியூரப்பா அமைச்சரவையில் லக்ஷ்மண் சாவடி துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இது பா.ஜ.கவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்டுத்தியுள்ளது. லக்ஷ்மண் சாவடி தற்போது எம்.எல்.ஏவாக இல்லாத நிலையில் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டிருப்பது கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.கவின் மூத்த எம்.எல்.ஏக்களான உமேஷ் காட்டி, ரேணுக்காச்சார்யா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். லிங்காயத் சமூகத்தில் சாவடிக்கு இருக்கும் செல்வாக்கின் காரணமாகவும், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களை கட்சிக்கு இழுத்ததில் முக்கிய பங்கு வகித்ததன் காரணமாக சாவடிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

Also see:
First published: August 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading