Home /News /national /

பெண்கள் பாய் பிரெண்ட் மாற்றுவது போல கூட்டணியை மாற்றும் நிதீஷ் குமார்.. பாஜக தலைவர் கருத்தால் சர்ச்சை

பெண்கள் பாய் பிரெண்ட் மாற்றுவது போல கூட்டணியை மாற்றும் நிதீஷ் குமார்.. பாஜக தலைவர் கருத்தால் சர்ச்சை

பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா

பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா

நிதீஷ் குமார் மாறி மாறி கூட்டணி வைப்பதை பெண்கள் தங்கள் நண்பர்களின் தேர்வு செய்வதுடன் ஒப்பிட்டு பாஜக தலைவர் கைலாஷ் கூறிய கருத்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madhya Pradesh | Indore
    பீகாரில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டணி மாற்றம் குறித்தும் பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா விமர்சித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற கட்சி நிகழ்சியில் பங்கேற்றார்.

    அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய நிலையில், பீகாரில் நடைபெற்ற கூட்டணி மாற்றம் குறித்து கருத்து தெரிவித்தார். பீகாரில் முதலமைச்சர் நிதீஷ் குமார் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, எதிர்க்கட்சிகளாக இருந்த ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கூட்டணிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. மீண்டும் நிதீஷ் குமார் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

    நிதீஷ் குமாரின் இந்த கூட்டணி மாற்றம் குறித்து பாஜகவினர் தொடர்ந்து கடும் விமர்சனத்தை முன்வைத்து வரும் நிலையில், கைலாஷ் விஜய்வர்கியா நிதீஷ் குமாரின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக சாடியுள்ளார். "நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போது என்னிடம் ஒருவர் இந்த நாட்டு பெண்கள் தங்களின் ஆண் நண்பர்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வார்கள் என்றார். பீகார் முதலமைச்சரும் அப்படித் தான். யார் கையை எப்போது பிடித்திருப்பார். எப்போது யார் கையை விடுவார் என்று கண்டுபிடிக்க முடியாது. தேவைக்கேற்ப அவர் மாற்றிக்கொள்வார்" எனச் சாடியுள்ளார்.

    நிதீஷ் குமாரின் கூட்டணி செயல்பாட்டை பெண்கள் தங்கள் நண்பர்களை தேர்வு செய்வதுடன் ஒப்பிட்டு பாஜக தலைவர் கைலாஷ் கூறிய கருத்து விவாதப் பொருளாக மாறியுள்ளது. இவர் இதுபோன்று பரபரப்பு கருத்துக்களை கூறும் வழக்கம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: கடன்பாக்கி... இனி மின்சாரம் வாங்க தடை... தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம்?

    பீகார் முதலமைச்சராக இருந்து வரும் நிதீஷ் குமார், 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியை விட்டு வெளியேறினார். எதிர்தரப்பான ஆர்ஜேடி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மெகா கூட்டணி வைத்து 2015ஆம் ஆண்டில் மீண்டும் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சரானார். அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே ஆர்ஜேடி மெகா கூட்டணியை விட்டு வெளியேறி மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து அக்கட்சியின் ஆதரவுடன் முதலமைச்சராக தொடர்ந்தார். தற்போது, மீண்டும் பாஜகவுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கூட்டணியை முறித்து பழைய மெகா கூட்டணிக்கு திரும்பியுள்ளார் நிதீஷ் குமார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: BJP, Boy Friend, Nitish Kumar

    அடுத்த செய்தி