பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!

Swami Chinmayanand Arrested | புகாரளித்த பெண்ணின் குடும்பத்துக்கு அவர் மிரட்டல் விடுத்த வீடியோ, ஆடியோ ஆதாரங்களும் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!
சுவாமி சின்மாயானந்த்
  • News18
  • Last Updated: September 20, 2019, 10:18 AM IST
  • Share this:
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்தா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி ஒருவர், பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

இந்த வீடியோ வெளியிட்ட பின்னர் அந்த மாணவி மாயமானார். பின்னர் ராஜஸ்தானில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி நடந்து வருகிறது.


இதற்கிடையே இந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சின்மயானந்தாவின் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 2 முதல்வர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், திடீரென நெஞ்சு வலி காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் பல வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை சமர்ப்பித்தார். மேலும், அவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

புகாரளித்த பெண்ணின் குடும்பத்துக்கு அவர் மிரட்டல் விடுத்த வீடியோ, ஆடியோ ஆதாரங்களும் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Loading...

இந்நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

First published: September 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...