உள்ளூர் பா.ஜ.க தலைவர் உள்பட 5 பேர் சுட்டுக் கொலை! மகாராஷ்டிராவில் பரபரப்பு

உள்ளூர் பா.ஜ.க தலைவர் உள்பட 5 பேர் சுட்டுக் கொலை! மகாராஷ்டிராவில் பரபரப்பு
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: October 7, 2019, 2:45 PM IST
  • Share this:
மகாராஷ்டிராவின் ஜல்கவான் நகரில் பாஜக உள்ளூர் தலைவர் உட்பட 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பூஷவால் பகுதியில் வசிக்கும் பா.ஜ.க உள்ளூர் தலைவர் ரவீந்திர காரத், தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், ரவீந்திர காரத்தை துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரையும், அவரது மகன் நண்பரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், 3 பேரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Also see:

First published: October 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading