ஹோம் /நியூஸ் /இந்தியா /

தாஜ்மஹால் சிவாலயமாக இருந்தது: 20 அறைகளை திறக்க உயர் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் மனு

தாஜ்மஹால் சிவாலயமாக இருந்தது: 20 அறைகளை திறக்க உயர் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் மனு

நன்றி - Reuters

நன்றி - Reuters

இந்து கோயில் மற்றும் சிலைகள் தாஜ்மஹாலில் உள்ளாதா என்பதை தெரிந்து கொள்ள நீண்டகாலம் மூடியுள்ள அறைகளை திறக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  உத்தரப் பிரதேச பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவர் ராஜ்னீஷ் சிங், அம்மாநிலத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாஜ்மஹால் குறித்து மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், தாஜ்மஹாலில் மூடியிருக்கும் 20 அறைகளையும் திறந்து அதில் உள்ள உண்மையை பார்க்கவேண்டும் எனக் கோரியுள்ளார்.

  இது தொடர்பாக மனுவில் கூறியதாவது, "சில வரலாற்று ஆசிரியர்களும், இந்து அமைப்பினரும் இந்த தாஜ்மஹால் முன்பு சிவாயலமாக இருந்ததாக கூறிவருகின்றனர். முகலாய அரசர் ஷாஜஹான் கட்டிய இந்த கோயிலின் முந்தைய பெயர் தேஜோ மஹால் எனவும், இதன் வடிவத்தை பார்க்கும் போது ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகவும் தோற்றமளிக்கிறது.

  இதன் மேல் மற்றும் கீழ் பாகங்களில் 20 அறைகள் நீண்ட நாள்களாக பூட்டியே உள்ளன. பிஎன் ஓக் உள்ளிட்ட பல வரலாற்று ஆசிரியர்கள் இதில் சிவன் உள்ளிட்ட இந்துக் கடவுகளின் சிலை இருப்பதாக கருதுகின்றனர். எனவே, இந்திய தொல்லியல் துறை இந்த அறைகளை திறந்து காட்ட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோருகிறோம். இதனால் யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படாது. சர்ச்சைக்கு முடிவு எட்டப்படும்" என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: கேரளாவில் குழந்தைகளை குறிவைத்து வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல்... அறிகுறிகள், சிகிச்சைகள் என்ன?

  இந்த மனுவை பதிவர் நீதிமன்ற கோப்பில் பதிவேற்றம் செய்த நிலையில், இதை விசாரணைக்கு ஏற்கப்படுமா என்பது பின்னர் தெரிய வரும். ஏற்கனவே, உத்தரப் பிரதேசத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அருகே உள்ள மசூதி, மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி பகுதியில் உள்ள ஆகியவற்றில் இது போன்ற இந்து கோயில் உள்ளதா என ஆய்வு நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Allahabad, Taj Mahal, Tajmahal