அரசு அதிகாரியை செருப்பால் தாக்கிய வழக்கில் பாஜக பிரபலம் சோனாலி போகத் கைது!

சந்தை குழு செயலரை தாக்கிய வழக்கில் டிக் டாக் பிரபலமும் பாஜகவைச் சேர்ந்தவருமான சோனாலி போகத்தை ஹரியானா போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசு அதிகாரியை செருப்பால் தாக்கிய வழக்கில் பாஜக பிரபலம் சோனாலி போகத் கைது!
அதிகாரியை சோனாலி போகத் தாக்கும் காட்சி
  • Share this:
ஹிசார் பகுதியில் செயல்பட்டுவரும் தானிய சந்தையின் செயலாளரான சுல்தான் சிங்கை, சோனாலி போகத் செருப்பால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் கடந்தவாரம் பரவியது.

சுல்தான் சிங் தன்னை தரக்குறைவாக பேசியதாக சோனாலி போகத்தும், சோனாலி தன்னை தாக்கியதாக சுல்தான் சிங்கும் மாறிமாறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


Also read... ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பில் மாற்றம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு...

இந்நிலையில் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளில் சோனாலி போகத் மீது ஹரியானா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading