பாதுகாப்பு படையினருக்கு காங்கிரஸ் வலியைக் கொடுக்கிறது - அமித் ஷா

பிரதமர் மோடியும் சாம் பித்ரோதாவின் பேச்சை மேற்கோள் காட்டி காங்கிரசை விமர்சித்திருந்தார்.

news18
Updated: March 23, 2019, 10:32 PM IST
பாதுகாப்பு படையினருக்கு காங்கிரஸ் வலியைக் கொடுக்கிறது - அமித் ஷா
அமித் ஷா
news18
Updated: March 23, 2019, 10:32 PM IST
பாதுகாப்பு படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தை தனது வாக்கு வங்கி அரசியலுக்கு காங்கிரஸ் பயன்படுத்தி அவர்களுக்கு வலியை கொடுக்கிறது என்று அமிஷ் ஷா கூறியுள்ளார்.

இந்திய காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவர் சாம் பித்ரோதா, சமீபத்தில் பாலகோட் தாக்குதல் தொடர்பாக சந்தேகம் எழுப்பியிருந்தார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பிரதமர் மோடியும் சாம் பித்ரோதாவின் பேச்சை மேற்கோள் காட்டி காங்கிரசை விமர்சித்திருந்தார். இந்நிலையில், பாஜக தலைவரும் இந்த விஷயத்தை கையில் எடுத்து காங்கிரஸ் கட்சிக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள அவர், “தேச விரோத கருத்துக்களை வெளியிடுவது, வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவது ஆகியவை காங்கிரஸ் கட்சியின் பழைய மோசமான தந்திரம். தேச நலன் மற்றும் தேசப் பாதுகாப்பை விட வாக்கு வங்கி அரசியலே காங்கிரசுக்கு முக்கியம்

பாதுகாப்பு படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தை தனது வாக்கு வங்கி அரசியலுக்கு காங்கிரஸ் பயன்படுத்தி அவர்களுக்கு வலியை கொடுக்கிறது.

தீவிரவாத தாக்குதல்களுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக், வான் தாக்குதல்கள் தேவையில்லை என்று காங்கிரஸ் கூறுகிறது. இதுதான் உங்களது (ராகுல் காந்தி) கட்சியின் கொள்கையா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Also See..
Loading...
First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...