நாளை தமிழகம் வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா!

13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தமிழகம் வர உள்ளானர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: April 1, 2019, 10:30 AM IST
நாளை தமிழகம் வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா!
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா
Web Desk | news18
Updated: April 1, 2019, 10:30 AM IST
மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை 3 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து சிவகங்கை மற்றும் கோவையிலும் பாஜக வேட்பாளர்கள் எச். ராஜா மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆதரவாக அமித் ஷா வாக்கு சேகரிக்க உள்ளார்.

தொடர்ந்து 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தமிழகம் வர உள்ளானர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... 2020-ம் ஆண்டு 35ஏ பிரிவு அரசியலமைப்பிலிருந்து நீக்கப்படும் : அமித் ஷா
First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...