ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ₹ 25 கோடி வரை பாஜக பேரம் - ராஜஸ்தான் முதல்வர் பகீர் புகார்
ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ₹ 25 கோடி வரை பாஜக பேரம் - ராஜஸ்தான் முதல்வர் பகீர் புகார்
அசோக் கெலாட்
கர்நாடகா, மத்திய பிரதேசத்தைப் போன்று ராஜஸ்தானிலும் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, தங்களது எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதியில் தங்கவைத்துள்ளது.
ராஜஸ்தானில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இரண்டில் காங்கிரஸ் கட்சியும், ஒன்றில் பாஜகவும் வெற்றி பெறும் சூழல் உள்ளது. ஆனால், ஒருவருக்கு பதிலாக 2 பேரை களமிறக்கியுள்ள பாஜக, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து வரும் 12 சுயேச்சைகளை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதையடுத்து, தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களும், ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் ஜூன் 18ஆம் தேதி தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் , காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு ரூ25 கோடி வரை பாஜக பேரம் பேசியுள்ளது. முதல் கட்டமாக ரூ15 கோடியும் ஆட்சியை கவிழ்த்த பின் ரூ10 கோடியும் தருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு பாஜக உறுதி அளித்திருக்கிறது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.