சர்தார் வல்லபாய் படேல் சிலை சீனா தயாரிப்பு - ராகுல் குற்றச்சாட்டு

சர்தார் வல்லபாய் படேல் சிலை சீனா தயாரிப்பு  - ராகுல் குற்றச்சாட்டு
சர்தார் வல்லபாய் படேல் சிலை
  • News18
  • Last Updated: September 28, 2018, 12:23 PM IST
  • Share this:
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் சிலையில் மேட் இன் சீனா என எழுதப்பட்டிருப்பதன்  மூலம், அவரை மத்திய அரசு அவமதிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் 182 அடியில் உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்க அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி முடிவு செய்திருந்தார்.

ரூ.2000 கோடி மதிப்பிலான இந்த சிலைக்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தச் சிலையை அமைப்பதற்கு இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து மண் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டன. தற்போது இந்த சிலை கட்டுமானத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்தச் சிலை வரும் அக்டோபர் 31-ம் தேதி பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஒற்றுமைக்காகவும், நேர்மைக்காகவும் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலைக்கு ஒருமைப்பாட்டு சிலை என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் சட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் சிலையில் மேட் இன் சீனா என எழுதப்பட்ட மூலம், அவரை மத்திய அரசு அவமதிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் அமித்ஷா, படேலின் புகழுக்கு பெருமை சேர்க்கும் முயற்சிக்கு ராகுல்காந்தி களங்கம் விளைவிப்பது அவமானகரமானது என தெரிவித்துள்ளார். ALSO WATCH...

First published: September 28, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்