மத்திய அரசு வாக்குறுதி அளித்தபடி, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானிடம் இருந்து மத்திய அரசு விடுதலை செய்யும் என்று மத்திய இணையமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறியுள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை நீக்கியதைப் போன்று மத்திய அரசு ஆக்கிரமிப்பு காஷ்மீரை விடுவிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் மகாராஜா குலாப் சிங்குடைய 20 அடி உயர சிலையை, மத்திய இணையமைச்சர் ஜிதேந்திரா சிங் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-
மத்தியில் ஆளும் பாஜக அரசு தான் அளித்த ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-யை நீக்குவோம் என்று வாக்குறுதி அளித்தோம். இதனை சிலர் கிண்டல் செய்தார்கள். ஆனால் நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம்.
இதையும் படிங்க - ''மகனின் உடல் மாணவர்களின் கல்விக்கு உதவட்டும்'' - நவீனின் உடலை தானமாக வழங்கி பெற்றோர் உருக்கம்
இதேபோன்றுதான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி பாகிஸ்தானிடம் இருந்து மீட்கப்படும். இந்த வாக்குறுதியையும் மத்தி அரசு நிச்சயம் நிறைவேற்றும்.
1994-ல் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதிகளை விட்டு, பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்குறுதியை பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் அளித்தார் என்பதை நினைவுபடுத்திக் கொள்கிறேன்.
இதையும் படிங்க - 'லஞ்சம், பரிந்துரை இல்லாமல் 25 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்' : பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு
1980-ம் ஆண்டு பாஜக ஆரம்பிக்கப்பட்ட போது, மத்தியில் ஆட்சியமைப்போம் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனை அப்போது பலரும் கிண்டல் செய்தார்கள். இன்றைக்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தான் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உழைத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.