அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படாவிட்டால் பாஜக அரசு நீடிக்காது - உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படாவிட்டால் மத்தியிலுள்ள பாஜக அரசு நீடிக்காது. இதுதொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார் உத்தவ் தாக்கரே.

 • News18
 • Last Updated :
 • Share this:
  அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படாவிட்டால் மத்தியிலுள்ள பாஜக அரசு நீடிக்காது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

  உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி  விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் சார்பில் இன்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

  பேரணியையொட்டி அயோத்தியில் 4000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அயோத்தி முழுவதும் ஆயிரக்கணக்கானோர் நாள் முழுவதும் ராம நாமத்தை எழுப்பியவாறு காணப்பட்டனர்.

  பேரணியில் பங்கேற்றோர்


  இந்த விவகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது: எனது அயோத்தி வருகையின் பின்னணியில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படாவிட்டால் மத்தியிலுள்ள பாஜக அரசு நீடிக்காது. இதுதொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். இந்துக்களின் உணர்வுகளுடன் அரசு விளையாடக் கூடாது.

  நாட்கள், வருடங்களைத் தொடர்ந்து தலைமுறைகளும் கடந்து செல்கின்றன, ஆனால், அயோத்தியில் ராமர் கோவில் இன்னும் எழும்பவில்லை. நரேந்திர மோடி அரசு கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ராமர் கோவில் கட்டப்படும் தேதியை அறிவிக்க வேண்டும்.

  அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்த உறுதிமொழியிலிருந்து பின்வாங்கிவிட்டால் பாஜகவால் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றார் உத்தவ் தாக்கரே.

  ராமர் கோவில் குறித்து நாக்பூரில் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாக்வத், ‘அயோத்தி வழக்குக்கு உச்ச நீதிமன்றம் முன்னுரிமை அளிக்கவில்லை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமாகும். எனவே, இறுதி முடிவு விரைவாக எட்டப்பட வேண்டும்’ என்றார்.

  மோகன் பகவத்


  இந்த விவகாரம் குறித்து விஷ்வ இந்து பரிஷத் தேசிய துணை தலைவர் சம்பத் ராய் கூறுகையில், ’நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சர்ச்சைகுரிய இடத்தை 3 பாகமாக பிரிக்க முடியது. ராமர் கோவில் கட்டுவதற்கு முழு நிலமும் வேண்டும்’ என்றார்.

  டிசம்பர் 11-ம் தேதிக்குப் பிறகு இறுதி முடிவு: பேரணியில் பங்கேற்ற சுவாமி ரம்பாத்ராசார்யா கூறுகையில், ‘டிசம்பர் 11-ம் தேதிக்குப் பிறகு ராமர் கோவில் தொடர்பான இறுதி முடிவை பிரதமர் நரேந்திர மோடி எடுக்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஒருவர் உறுதியளித்துள்ளார்’ என்றார்.

  ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Also watch
  Published by:DS Gopinath
  First published: