• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மத்திய அரசு ஜனநாயகத்தை மதிக்கவில்லை: எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு

மத்திய அரசு ஜனநாயகத்தை மதிக்கவில்லை: எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு

திருச்சி சிவா

திருச்சி சிவா

பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக மீனவர் பிரச்சினைகள் பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவோம் என்கிறார் திருச்சி சிவா.

  • Share this:
    பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக மீனவர் பிரச்சினைகள் பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவோம் என்று கூறிய எம்.பி. திருச்சி சிவா, ஜனநாயகத்தை மதிக்கும் அரசாங்கமாக பாஜக அரசு இல்லை, ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மூன்று வேளாண் சட்டங்களும் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து பேசாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள். இவை நடைமுறைக்கு வரும்போது குறைந்தபட்ச ஆதாரவிலை, அரசின் நேரடி கொள்முதல், பொது வினியோகத் திட்டம் ஆகிய மூன்றும் இல்லாமல் போய்விடும்.

    எனவேதான் அந்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் மத்திய அரசு அதை பொருட்படுத்தவே இல்லை. இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று குடியரசுத்தலைவரிடம் கேட்டுக் கொண்டோம்.

    ஆனால் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். எனவே, எல்லாம் அவசர கதியில் நடந்தது. ஆகவே, நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிப்பது என்று ஜனநாயக அடிப்படையில் 16 எதிர்க்கட்சிகள் சேர்ந்து முடிவு எடுத்து இருக்கிறோம்.

    உபா சட்டம் என்பது அரசுக்கு ஆகாதவர்களை துன்புறுத்துவதற்கும், அடிபணிய வைப்பதற்கும்தான் பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயகத்தை மதிக்கும் அரசாங்கமாக இது இல்லை. ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருக்கிறது. அதை தடுக்கும் பொறுப்பு எதிர்க்கட்சிகளாகிய எங்களுக்கு இருக்கிறது.

    மேலும் படிக்க... நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்... குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு

    பட்ஜெட் கூட்டத்தொடரில் கொரோனா அணுகுமுறையில் உள்ள தோல்விகள், இலங்கை தமிழர் மீனவர் பிரச்சினை, புதிய கல்விக்கொள்கை, ஜிஎஸ்டி அமலாக்கத்தில் தோல்வி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து திமுக பேசும்” என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: