ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவுக்கு சீன ராணுவம் செய்ய முடியாத சேதத்தை பாஜக அரசு செய்துள்ளது - ராகுல் விமர்சனம்

இந்தியாவுக்கு சீன ராணுவம் செய்ய முடியாத சேதத்தை பாஜக அரசு செய்துள்ளது - ராகுல் விமர்சனம்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இன்ஜினியரிங் போன்ற டிகிரி படித்த இளைஞர்கள் கார் டிரைவர்களாகவும், உணவு டெலிவரி வழங்கும் நபர்களாகவும் வேலை செய்யும் அவல நிலை நாட்டில் உள்ளது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madhya Pradesh, India

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கியது. பின்னர் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ராகுல்காந்தி நடைப்பயணத்தைத் தொடர்ந்தார். இந்த யாத்திரை தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

அங்குள்ள இந்தூர் பகுதியில் யாத்திரை மேற்கொண்டு பேசிய ராகுல் காந்தி, பாஜக தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களை செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து பேசினார். சீன ராணுவம் செய்ய முடியாத சேதத்தை இந்திய மக்களுக்கு பாஜக அரசு செய்துள்ளதாக தாக்கி விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது பேசும்போது கூறியதாவது," நாட்டின் விவசாயிகள், சிறு குறு வணிகர்கள் ஆகிய இருவர்கள்தான் அதிக வேலைகளை உருவாக்கும் திறன் கொண்டவர்கள். இவர்களின் கைகளில் இருந்து பணத்தை பறிக்கும் விதமாக பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்ற இரு மோசமான கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தி நாட்டை சேதப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உணவுக்கே பணமில்லை.. குழந்தை கொலை.. பிட்காயினால் பணமிழந்த ஐடி ஊழியரின் விபரீத முடிவு!

சீன ராணுவம் கூட செய்ய முடியாத சேதத்தை இந்தியாவுக்கு பணமதிப்பு நீக்கமும் ஜிஎஸ்டியும் செய்துள்ளது. இதன் காரணமாக இந்திய இளைஞர்கள் வேலையில்லாமல் திணறிவருகின்றனர்.

இன்ஜினியரிங் போன்ற டிகிரி படித்த இளைஞர்கள் கார் டிரைவர்களாகவும், உணவு டெலிவரி வழங்கும் நபர்களாகவும் வேலை செய்யும் அவல நிலை நாட்டில் உள்ளது. நாட்டில் ஊழலை ஒழித்ததாக கூறும் பாஜக, மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏக்களை பணத்தால் விலைக்கு வாங்கி வருகிறது. அப்படித்தான் மத்தியப் பிரதேச மாநிலத்திலும் 2018ஆம் ஆண்டு ஆட்சியை கவிழ்த்தது. இது ஊழல் இல்லை என்றால் எதை ஊழல் என்று கூறுவீர்கள்.  " இவ்வாறு ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

First published:

Tags: Demonetisation, GST, Madhya pradesh, Rahul gandhi