வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் கதாநாயகன் 'மோடியே'! அமித்ஷா புகழாரம்

கடந்த 50 ஆண்டுகளில் யாரும் பெற்றிட முடியாத ஒரு வெற்றியை பா.ஜ.க பெற்றுள்ளது - அமித் ஷா

Vijay R | news18
Updated: May 23, 2019, 9:49 PM IST
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் கதாநாயகன் 'மோடியே'! அமித்ஷா புகழாரம்
மோடி - அமித் ஷா
Vijay R | news18
Updated: May 23, 2019, 9:49 PM IST
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அடைந்துள்ளது. இந்த வெற்றியின் கதாநாயகன் பிரதமர் மோடியே என அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 350 தொகுதிகள் வரை முன்னிலை வகிக்கிறது. மோடி தலைமையிலான பாஜக அரசு தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

மக்களவைத் தேர்தலில் கிடைத்த மகத்தான வெற்றியை அடுத்து பிரதமர் மோடி, அமித் ஷா டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு மலர் தூவி பா.ஜ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொண்டர்களுக்கு மத்தியில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா பேசுகையில், ’வரலாற்று சிறப்புமிக்க ஒரு வெற்றியை பாஜக பெற்றுள்ளது. தொடர்ந்து 2-வது முறையாக பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

இதன் மூலம் கடந்த 50 ஆண்டுகளில் யாரும் பெற்றிட முடியாத ஒரு வெற்றியை பா.ஜ.க பெற்றுள்ளது. இதற்கான முழு பெறுமையும் நரேந்திர மோடியை தான் சேரும். பா.ஜ.கவின் வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மேற்குவங்கத்தில் பல தடைகளை மீறி 18 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. எதிர்கட்சிகளின் மாபெரும் கூட்டணியை நாங்கள் தகர்த்துள்ளோம்'' என்றார்.
First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...