• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ‘சிவன் முதலமைச்சராக இருக்கும்போது கொரோனா எப்படி பாதிக்கும்?’ - பாஜக பொதுச்செயலாளர்

‘சிவன் முதலமைச்சராக இருக்கும்போது கொரோனா எப்படி பாதிக்கும்?’ - பாஜக பொதுச்செயலாளர்

சிவராஜ் சிங் சவுகான்

சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தியபோது சிவராஜ்சிங் சவுகானும், விஷ்ணு தத்தும் எங்கிருந்தனர்?

  • Share this:
    மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சிவனாகவும், மாநிலத் தலைவர் விஷ்ணுவாக உள்ளபோது கொரோனா எப்படி பாதிக்கும் என்று பாஜக பொதுச்செயலாளர் தருண் சுக் கூறியுள்ளார்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் முதலமைச்சராகவும், விஷ்ணு தத் சர்மா மாநில பாஜக தலைவராகவும் இருக்கின்றனர்.

    இந்நிலையில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சிவனாகவும், மாநிலத் தலைவர் விஷ்ணுவாகவும் இருக்கும் போது, இங்கு கொரோனா எப்படி பாதிப்பை ஏற்படுத்தும்?" என்று குறிப்பிட்டிருந்தார்.

    Must Read : 11 ஆயிரத்திலிருந்து மீண்டும் 1 லட்சமாக அதிகரிப்பு: அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா

    இதனைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் புபேந்திர குப்தா, “மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு ஜனவரி - மே மாதங்களுக்கு இடையில் மட்டும் 3.28 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது வழக்கமான இறப்பு விகிதத்தைவிட 54 சதவீதம் அதிகமாகும். மாநிலத்தில் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தியபோது சிவராஜ்சிங் சவுகானும், விஷ்ணு தத்தும் எங்கிருந்தனர்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: