நிர்மலா சீதாராமன் கையெழுத்தைப் போட்டு பண மோசடி செய்ததாக முரளிதரராவ் மீது வழக்கு!

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜ.க பொதுச் செயலாளராக உள்ள முரளிதரராவ் மத்திய அமைச்சரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மலா சீதாராமன் கையெழுத்தைப் போட்டு பண மோசடி செய்ததாக முரளிதரராவ் மீது வழக்கு!
முரளிதரராவ்
  • News18
  • Last Updated: March 27, 2019, 8:19 PM IST
  • Share this:
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  போல கையெழுத்திட்டு 2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் முரளிதரராவ் மீது தெலங்கானா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிலத்தரகர் மஹிபால் ரெட்டியின் மனைவி பிரவர்னா ரெட்டி சரூர்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், மஹிபால் ரெட்டியை பார்மா எக்ஸில் நிறுவனத்தின் தலைவராக நீடிக்கச் செய்வதாக உறுதியளித்து 2.17 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் போலியாக கையெழுத்திட்ட போலி நியமனக் கடிதத்தை(appointment letter) அளித்துள்ளார்’ என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், முரளிதரராவ் உள்ளிட்ட 9 பேர் மீது காவல்துறை, 406, 420, 468, 471, 506, 120-b,156 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜ.க பொதுச் செயலாளராக உள்ள முரளிதரராவ் மத்திய அமைச்சரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முரளிதரராவ், தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குற்றச்சாட்டை, முரளிதரராவ் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading...
Also see:

First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...