Home /News /national /

30 ஆண்டுகளில் எந்த கட்சியும் செய்யாத சாதனையை மாநிலங்களவையில் படைத்த பாஜக

30 ஆண்டுகளில் எந்த கட்சியும் செய்யாத சாதனையை மாநிலங்களவையில் படைத்த பாஜக

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

2014ம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு முதன்முறையாக ஆட்சி அமைத்தபோது  மாநிலங்களவையில் அக்கட்சியின் எம்பிக்கள் பலம் 55 ஆக இருந்தது. படிப்படியாக உயர்ந்து தற்போது 100ஐ எட்டியுள்ளது

    அசாம், திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தலில் தலா ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றது. இதன் மூலம், மாநிலங்களையில் பாஜக எம்பிக்களின் பலம் 100ஐ தாண்டியது. கடந்த 30 ஆண்டுகளில் காங்கிரஸ் உட்பட எந்த கட்சியும் எட்டாத சாதனை இதுவாகும்.

    13 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக 6 மாநிலங்களில் நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், அசாம், திரிபுரா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் இருந்து தலா ஒரு உறுப்பினர் பாஜக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளார். அதேவேளையில், பஞ்சாப் மாநிலத்தில் தன் வசம் இருந்த ஒரு இடத்தை பாஜக இழந்தது. பஞ்சாப் மாநிலத்தில் 5 மாநிலங்களை உறுப்பினர் பதவியையும் ஆம் ஆத்மி கைப்பற்றியது.

    பாஜகவுக்கு தற்போது 97 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர்.  புதிதாக வெற்றி பெற்ற 3 உறுப்பினர்கள் எண்ணிக்கை இன்னும் ராஜ்யசபா இணையதள பக்கத்தில் அப்டேட் செய்யப்படவில்லை. எனினும்,  மூன்று இடங்களை பாஜக கைப்பற்றிருப்பதன் மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 100ஆக உயர்ந்துள்ளது. 100 உறுப்பினர்களை பெற்றாலும் 245 எம்பிக்களை கொண்ட மாநிலங்களவையில் இது பெரும்பான்மையை விட குறைவுதான்.

    எனினும், கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் மாநிலங்களையில் 100 உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சி என்னும் சாதனையை பாஜக படைத்துள்ளது. கடந்த 1990ம் ஆண்டில் அப்போதை ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவையில் 108 எம்பிக்கள் இருந்தனர். அதன் பின்னர் தற்போதுதான் ஒரு கட்சி மாநிலங்களவையில் 100 எம்.பிக்களை பெறுகிறது.

    இதையும் படிங்க: திரும்ப பெறப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்.. வடகிழக்கில் அமைதி திரும்புமா?


    2014ம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு முதன்முறையாக ஆட்சி அமைத்தபோது  மாநிலங்களவையில் அக்கட்சியின் எம்பிக்கள் பலம் 55 ஆக இருந்தது. படிப்படியாக உயர்ந்து தற்போது 100ஐ எட்டியுள்ளது. 52 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
    Published by:Murugesh M
    First published:

    Tags: BJP, Rajya sabha MP

    அடுத்த செய்தி