முகப்பு /செய்தி /இந்தியா / தென் இந்தியாவைச் சேர்ந்த நியமன எம்பிக்கள்... தென்னகத்தைக் குறிவைத்த பாஜக! அமித்ஷா - மோடியின் அடுத்த மூவ்!

தென் இந்தியாவைச் சேர்ந்த நியமன எம்பிக்கள்... தென்னகத்தைக் குறிவைத்த பாஜக! அமித்ஷா - மோடியின் அடுத்த மூவ்!

தென் இந்தியாவைச் சேர்ந்த நியமன எம்பிக்கள்... தென்னகத்தைக் குறிவைத்த பாஜக! அமித்ஷா - மோடியின் அடுத்த மூவ்!

தென் இந்தியாவைச் சேர்ந்த நியமன எம்பிக்கள்... தென்னகத்தைக் குறிவைத்த பாஜக! அமித்ஷா - மோடியின் அடுத்த மூவ்!

Ilaiyaraaja | பாஜகவிடம் இருக்கும் அடுத்த தனித்துவமான விஷயம், பிரபலங்களை தங்கள் கட்சியில் முன்னிருத்துவது. குறிப்பாக விளையாட்டு துறை, சினிமா துறையில் முன்னணியில் இருக்கும் பல பிரபலங்கள் பாஜகவில் உள்ளனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

மகாராஷ்டிரா மாநிலத்தில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம் நிகழ்ந்த சூழலில், கடந்த 2ஆம் தேதி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் பாஜக தனது ஆட்சியை விரைவில் நிலைநாட்டும். வரும் 40 ஆண்டுகள் பாரதிய ஜனதா கட்சியின் சகாப்தம்தான். பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி தென்மாநிலங்களிலிருந்து வரும் என்று அனைவரிடமும் நம்பிக்கை உள்ளது,’ என பேசியிருந்தார்.

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு போன்ற முக்கிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை மாநிலங்களவைக்கு நியமன உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் நியமிப்பது வழக்கம். அந்த வகையில், மாநிலங்களவை நியமன எம்பியாக தமிழகத்தைச் சேர்ந்த இசைஞானி இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. சமீப காலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் இளையராஜா, கடந்த ஏப்ரம் மாதம் வெளியான ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்திற்கு அவர் எழுதிய முன்னுரை பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அந்த புத்தகத்தில், பிரதமர் மோடியை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியிருந்தார் இளையராஜா. மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கர் நிச்சயம் பெருமைப்படுவார் என அவர் தெரிவித்திருந்தது தமிழகத்தில் அதிர்வலையை கிளப்பியது. பாக்கியராஜ் போன்ற பல சினிமா நட்சத்திரங்கள் இளையராஜாவுக்கு ஆதரவாக பேசினாலும், அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலரும் இளையராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பல தரப்பினரும் இதுகுறித்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்த நிலையில், மோடி குறித்த தனது கருத்தை திரும்ப பெற மாட்டேன் என தன்னிடம் கூறியதாக இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் தெரிவித்திருந்தார்.

இந்த சர்ச்சை கிளம்பியபோதே மறுபக்கம் பாஜக சார்பில் நியமன எம்பியாக இளையராஜா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி பரவலாக பேசப்பட்டது. எதிர்பார்த்தது போலவே தற்போது மாநிலங்களவை நியமன எம்பியாக இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன் தேர்வு செய்யப்பட்டவர்களில் கேரளாவை சேர்ந்த பி.டி. உஷா, கர்நாடகாவை சேர்ந்த வீரேந்திர ஹெக்டே, ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் அடங்குவர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், தேர்வு செய்யப்பட்ட நால்வரும் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆக, அமித்ஷா-மோடியின் கணக்குபடி தற்போது பாஜக தீவிரமாக குறிவைத்திருக்கும் பகுதி தென்னகம் ஆகும்.

மத்திய அமைச்சர் அமித்ஷா சொல்வது போன்று தென் மாநிலங்களில் பாஜக தடம் பதிக்குமா? கூட்டணி வாய்ப்புகள் என்ன?

தென்னகத்தைப் பொறுத்தவரை, கர்நாடக மாநிலம் மட்டும்தான் பாஜக வசம் உள்ளது. இது தவிர தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் பாஜக-விற்கு வாய்ப்பு கிடையாது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. வட இந்தியாவில் பல மாநிலங்களில் தனது காவி நிறத்தை பரப்பியிருந்தாலும், ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸுடன் கர்நாடகா போன்ற மேலும் சில மாநிலங்களில் பாஜக தனது பலத்தை காட்டியிருந்தது. ஆனால், தென் இந்தியாவை பொறுத்தவரை பாஜகவிற்கு ‘நோ எண்ட்ரி’யாகதான் பார்க்கப்படுகிறது.

பாஜகவை பொறுத்தவரை தென் மாநிலங்களில் தனித்து நின்று தனது பலத்தை காட்ட வாய்ப்பில்லை என்பது பலரும் அறிந்த விஷயம். ஆனால், சித்தாந்த ரீதியாகவே அவர்களால் இம்மாநிலங்களில் பலம் வாய்ந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, கேரளாவை பொறுத்தவரை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளும், ஆந்திராவை பொறுத்தவரை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி; இவை அனைத்துமே அந்தந்த மாநிலங்களில் பிரதான கட்சிகளும், பாஜகவின் கருத்தியல் கொள்கையோடு ஒன்றிணையாத கட்சிகளும் ஆகும். ஆகவே, கூட்டணிக்கான வாய்ப்பு சொர்ப்பம் என்பது நிதர்சனம்.

Also Read | கடவுள்… கையில் சிகரெட்… போஸ்டரால் ரோஸ்டாகும் இந்திய சினிமாக்கள்! என்ன சொல்கிறது கடந்தகாலம்?

இதுமட்டுமின்றி, பாஜகவிடம் இருக்கும் அடுத்த தனித்துவமான விஷயம், பிரபலங்களை தங்கள் கட்சியில் முன்னிறுத்துவது. குறிப்பாக விளையாட்டு துறை, சினிமா துறையில் முன்னணியில் இருக்கும் பல பிரபலங்கள் பாஜகவில் உள்ளனர். பிரபலங்களை வைத்து தங்கள் செல்வாக்கை உயர்த்த நினைக்கும் பாஜக, முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீருக்கு எம்.பி. சீட் கொடுத்தது முதல் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத்தை 2019ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைத்தது வரை அனைத்தும் பாஜகவின் வியூகம். அதிலும், கிரிக்கெட் வீரர் தோனியை ஜார்க்கண்ட் தேர்தலில் நிற்க வைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையே, தென் மாநிலங்களை தற்போது குறிவைக்கும் பாஜக, இளையராஜா போன்ற மக்களிடையே மிக பிரபலமான ஒருவராக இருக்கும் பட்சத்தில் தங்கள் கணக்கை தொடங்கலாம் என எண்ணுகிறது. அந்த வகையில், இளையராஜாவை மாநிலங்களவை நியமன எம்பியாக அக்கட்சி தேர்ந்தெடுத்துள்ளது. இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டபோது அவருக்கு எதிராக மக்கள் பலரும் அதிருப்தி தெரிவித்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக அவர் பாஜகவின் நியமன உறுப்பினராக மாறியிருப்பது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Amit Shah, BJP, Ilaiyaraja, PM Modi