மாநிலங்களவை தேர்தல் - கர்நாடக பாஜகவுக்கு தேசிய தலைமை கொடுத்த அதிர்ச்சி

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியல் விவகாரத்தில் கர்நாடக மாநில தலைமைக்கு பாஜக தேசிய தலைமை மெல்லிய அதிர்ச்சி கொடுத்துள்ளது

மாநிலங்களவை தேர்தல் - கர்நாடக பாஜகவுக்கு தேசிய தலைமை கொடுத்த அதிர்ச்சி
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியல் விவகாரத்தில் கர்நாடக மாநில தலைமைக்கு பாஜக தேசிய தலைமை மெல்லிய அதிர்ச்சி கொடுத்துள்ளது
  • News18
  • Last Updated: June 8, 2020, 5:52 PM IST
  • Share this:
கர்நாடகாவில் இருந்து 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இருதரப்புக்கும் தலா 2 இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருந்தது.

காங்கிரஸ் தரப்பில் மல்லிகார்ஜுன கார்கே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், அக்கூட்டணி சார்பில் மஜத தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா போட்டியிட உள்ளார். இருவருமே, கடந்த மக்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தனது 60 வருட அரசியல் வாழ்க்கையில் இரண்டாம் முறையாக மாநிலங்களவைக்கு தேவகவுடா தேர்வாக உள்ளார்.  இதற்கிடையே, 3 வேட்பாளர்களை அம்மாநில முதல்வர் எடியூரப்பா இறுதி செய்து,  கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார் மூலமாக ஒரு பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்பினார். 4 இடங்களுக்கு 5 பேர் வேட்பாளராகள் போட்டியிடுவார்கள் என்பதால் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தயாரானது.


ஆச்சரியம் மற்றும் மெல்லிய அதிர்ச்சி தரும் விதமாக, மாநில தலைமை அளித்த வேட்பாளர்கள் பட்டியலை நிராகரித்து, தேசிய தலைமையே 2 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

பெலகாவி மாவட்ட பாஜக தலைவராக உள்ள எரன்னா கடாடி மற்றும் வழக்கறிஞராக உள்ள ராய்ச்சூரைச் சேர்ந்த அசோக் காஸ்டி ஆகிய இருவரை பாஜக தேசிய தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கர்நாடக மாநில தலைமைக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் இருவரையும் கட்சியிலேயே பலருக்கு தெரியாது என்று அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர். வெளியே முகம் தெரியாத இருவரை எம்.பி. தேர்தலில் வேட்பாளராக அக்கட்சி அறிவித்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மொத்தம் 4 பேர் மட்டுமே போட்டியிடுவதால், தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை. நால்வருமே போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.First published: June 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading