Home /News /national /

ராஜஸ்தானில் பிரதமர் மோடி ஜனநாயகத்தை அழிக்கிறார் - அசோக் கெலாட் குற்றச்சாட்டு

ராஜஸ்தானில் பிரதமர் மோடி ஜனநாயகத்தை அழிக்கிறார் - அசோக் கெலாட் குற்றச்சாட்டு

முதலமைச்சர் அசோக் கெலாட்

முதலமைச்சர் அசோக் கெலாட்

ராஜஸ்தானில் ஜனநாயகத்தை அழித்துக் கொண்டிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.

    நாடே கொரோனாவுக்கு எதிராக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராஜஸ்தானில் ஜனநாயகத்தை அழித்துக் கொண்டிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.

    ஜெய்பூரில் துணை முதல்வர் சச்சின் பைலட் உடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலங்களவைத் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக கூறினார்.



    ராஜஸ்தானில் இருந்து 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 107 எம்எல்ஏக்களக் கொண்ட ஆளும் காங்கிரசில் இருந்து இருவரும், 71 எம்எல்ஏக்களைக் கொண்ட பாஜகவில் இருந்து ஒருவரும் போட்டியின்றித் தேர்வாகும் சூழல் உள்ள நிலையில் பாஜக கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அவரை வெற்றி பெற வைக்க எம்எல்ஏக்களை பாஜக விலை பேசுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    Also read... மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Rajastan

    அடுத்த செய்தி