Home /News /national /

பஞ்சாப் மாநிலத்தில் பாஜக 65 இடங்களில் போட்டி: ஜெ.பி.நட்டா அறிவிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் பாஜக 65 இடங்களில் போட்டி: ஜெ.பி.நட்டா அறிவிப்பு

இந்த பட்டியலில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் அஜித் பால் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் அஜித் பால் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் அஜித் பால் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தில் பாஜக 65 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான லோக் காங்கிரஸ் கட்சி 37 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

    உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.

    ஐந்து மாநிலங்களுக்கும் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வாக்குப் பதிவு நிறைவடையவுள்ளது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், கோவா ஆகிய 2 மாநிலங்களுக்கு பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் பிப்.20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

    மேலும் படிக்க: எதிர்கட்சிகளின் வியூகம்.. பாஜகவுக்கு சாதகம்.. மீண்டும் 2017 தேர்தல் முடிவு எதிரொலிக்குமா?

    இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதியினை அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார்.

    அதன்படி, பாஜக 65 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான முன்னாள் முதலமைச்சரின் லோக் காங்கிரஸ் 37 இடங்களிலும், சிரமோணி அகாலி தளம் 15 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அம்ரீந்தர் சிங் 22 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் அஜித் பால் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    சமூகத்தின் பல்வேறு தளங்களிலிருந்து சிறந்த வேட்பாளர் பட்டியலை தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கான வெளியிட்டுள்ளோம்.” என்றும் அம்ரீந்தர் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக இவர் பாட்டியாலா தொகுதியில் போட்டியிடுகிறார். மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் 34 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான முதற்கட்ட வேட்பாளர்களை கடந்த வெள்ளிக்கிழமை பாஜக வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க: 5 மாநில தேர்தல்: எங்கு எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு? கருத்துக் கணிப்பு சொல்வது என்ன?
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Election 2022

    அடுத்த செய்தி