முகப்பு /செய்தி /இந்தியா / ஒடிசாவில் பாஜகவுடன் கரம் கோர்த்த காங்கிரஸ்: காரணம் இது தான்!

ஒடிசாவில் பாஜகவுடன் கரம் கோர்த்த காங்கிரஸ்: காரணம் இது தான்!

BJP - CONGRESS

BJP - CONGRESS

ஒடிசாவில் விநோதம்: பிஜூ ஜனதா தளத்துக்கு எதிராக முட்டை வீச்சில் இணைந்த பாஜக - காங்கிரஸ்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தேசிய அரசியலில் இரு துருவங்களாக திகழும், பாஜகவும், காங்கிரசும் ஒடிசாவில் ஒரு விஷயத்தில் ஒன்றாக இணைந்து செயல்பட்டிருப்பது விநோதமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் புதிய கூட்டணியை ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி சந்திக்க நேர்ந்திருக்கிறது. இரு கட்சிகளும் பிஜூ ஜனதா தளத்துக்கு எதிராக முட்டை வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒடிசா மாநிலம் பூரி நகரில் கடந்த புதன்கிழமையன்று ஒடிசா முதலமைச்சரும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்னாயக், பயணம் செய்த கான்வாய் வாகனம் மீது பாஜக ஆதரவாளர்கள் முட்டை வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறுநாளான நேற்று (வியாழன்) பிஜூ ஜனதா தளம் கட்சியின் பெண் எம்.பியான அபரஜிதா சாரங்கி புவனேஸ்வரில் பயணம் செய்த போது இதே பாணியில் அவர் மீது காங்கிரஸ் தொண்டர்கள் முட்டை வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர்.

மேலும் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதையும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் பனமலிபூர் பகுதியில் பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.பி அபரஜிதா சாரங்கி காரில் பயணம் செய்த போது காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததுடன், முட்டைகளையும் வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பெண் எம்.பியின் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எம்.பி பயணித்த கார் மீது முட்டைகள் மட்டுமல்லாது கற்களையும் வீசியதாகவும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

Also read:  பெங்களூரை மீண்டும் அலற வைத்த பயங்கர சத்தம் - மக்கள் பீதி

பாஜக மற்றும் காங்கிரஸ் என இரு கட்சிகளுமே தங்கள் கட்சியினரை குறிவைத்து முட்டை வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது பிஜூ ஜனதா தளம் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிஜூ ஜனதா தளம் கட்சியினரின் மாணவ அமைப்பான பிஜூ சாத்ரா ஜனதா தளம் அமைப்பினர் கேந்திரபதா பகுதியில் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு பயணம் செய்த கான்வாய் வாகனம் மீது முட்டை வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்தே பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் முட்டை வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also read:  தந்தையிடம் ரூ.75 லட்சம் வரதட்சணை வாங்கி மணமகள் செய்த செயலை பாருங்க

இதனிடையே பாலசோரில் புதிய ரயில் நிலைய கட்டுமான பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் பிஜூ ஜனதாதளம் மற்றும் பாஜக ஆதரவாளர்களிடையே மோதல் சூழல் ஏற்பட்டது. இந்த ரயில் நிலையம் அமைக்கும் பணிகளுக்கு காரணம் தங்கள் கட்சி தான் என இரு கட்சிகளும் உரிமை கோரி கோஷங்கள் எழுப்பின. அங்கிருந்த இருகட்சித் தலைவர்களும் தங்களின் கட்சித் தொண்டர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்ததால் பதற்றம் தவிர்க்கப்பட்டது.

First published:

Tags: BJP, Congress, Odisha