காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு சென்றாலும் மோடிக்கு மக்கள் சிறந்த வரவேற்பு அளிக்கின்றனர் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா, ‘மக்கள் ஏற்கெனவே தங்களது மனநிலையை தயார்படுத்தி வைத்துள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நான் எங்கே சென்றாலும் சிறந்த வரவேற்பை பெற முடிகிறது. மோடிக்கு சிறந்த ஆதரவு அளிக்கின்றனர்.
மகாபந்தன் கூட்டணியைப் பார்த்து நான் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். யார் உங்களுடைய தலைவர்? இந்தப் பேராசைப் பிடித்த கூட்டணியால் நாட்டின் நலனுக்காக எதுவும் செய்ய முடியாது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள்ளே சென்று தீவிரவாதிகளைக் கொன்றது. மேலும், அவர்களது முகாம்களைக் அழித்தது.
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு உடனடியாக பதிலடி கொடுத்ததால் மோடியின் தலைமையில் செயல்படும் இந்தியாவுக்கு மிகப் பெரும் மரியாதை ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியும், எதிர்கட்சிகளுக்கு விமானப் படைத் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். ராகுல் காந்தியின் அறிக்கைக்கும், பாகிஸ்தான் ஊடகங்களின் செய்திகளுக்கு எந்த வேறுபாட்டையும் கண்டுபிடிக்க முடியாது. ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் சட்ட விரோதமாக அகதிகளாக நுழைபவர்கள் குறித்து அவர்களது நிலைப்பாட்டை விளக்க வேண்டும்.
தெலுங்கின் பெருமை குறித்து தற்போது ராகுல் காந்தி பேசிவருகிறார். ஆனால், முன்னாள் முதல்வர் அஞ்சையாவை காங்கிரஸ் எவ்வாறு அவமானப்படுத்தியது என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். முன்னாள் பிரதமர் நரசிம்மராவ்வின் உடல் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்குள் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது’ என்று தெரிவித்தார்.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.