வயநாடு தொகுதியில் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரை நிறுத்திய பாஜக!

ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிபி சுனீர் போட்டியிட உள்ளார்.

news18
Updated: April 1, 2019, 3:44 PM IST
வயநாடு தொகுதியில் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரை நிறுத்திய பாஜக!
ராகுல் காந்தி | துஷார் வெல்லப்பளி
news18
Updated: April 1, 2019, 3:44 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளரை பாஜக நிறுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார்.

கேரள - தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி நிற்பதன் மூலம் தெற்கு மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்குகள் அதிகரிக்கும் என்று அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிபி சுனீர் போட்டியிட உள்ளார். மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கேரளாவில் நேருக்கு நேர் போட்டியில் இருக்கிறது.

ராகுல் காந்தியை தோற்கடிப்போம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சூளுரைத்துள்ளார். பாஜக சார்பில் பலம் பொருந்திய வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி கட்சியின் வேட்பாளரை பாஜக நிறுத்தியுள்ளது.பாரத் தர்ம சேனா என்ற கட்சியைச் சேர்ந்த துஷார் வெல்லப்பளி, வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று பாஜக தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

Read Also... 

இந்திய ராணுவத்தை ‘மோடியின் படை’ என்று குறிப்பிட்ட யோகி ஆதித்யநாத்!

அமேதி, வயநாடு என 2 தொகுதிகளில் ராகுல் போட்டி!

ஏழு வருடத்தில் 3 மடங்கு அதிகமான அமித் ஷாவின் சொத்து மதிப்பு!

See Also... 

First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...