காஷ்மீரில் காவியில் இருந்து பச்சை நிறத்துக்கு மாறிய பாஜக!

காஷ்மீரில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி நாளிதழ்களில் விளம்பரம் செய்துள்ளது.

காஷ்மீரில் காவியில் இருந்து பச்சை நிறத்துக்கு மாறிய பாஜக!
நாளிதழ் விளம்பரம்
  • News18
  • Last Updated: April 5, 2019, 9:20 PM IST
  • Share this:
ஜம்மு காஷ்மீரில் மக்களவை தேர்தலை ஒட்டி பாஜக சார்பில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்களில் காவிக்கு பதிலாக பச்சை நிறம் இடம்பெற்றுள்ளது.

மக்களவை தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பாஜக கடும் முயற்சி எடுத்துவருகிறது. வளர்ச்சி, முன்னேற்றம் என்று பாஜக தலைவர்கள் பேசி வந்தாலும், வழக்கமான மத நெடி பேச்சில் அடிக்கடி வெளிப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதுமே, “இந்துக்கள் பெரும்பாண்மையாக உள்ள தொகுதியில் ராகுலுக்கு போட்டியிட தைரியம் இல்லை” என்று பிரதமர் மோடியே தனது பிரசாரத்தில் பேசியிருந்தார்.


நேற்று ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், அங்கு அதிகளவில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரும் தங்களது கட்சிக்கொடிகளுடன் திரண்டனர்.

ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியை பாகிஸ்தானின் கொடி என்று பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினர். அக்கட்சியின், ஐடி பிரிவு தலைவரே இதனை ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், காஷ்மீரில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி நாளிதழ்களில் விளம்பரம் செய்துள்ளது.அதில், பாஜகவின் வழக்கமான நிறமான காவி இடம்பெறவில்லை. மாறாக பச்சை நிற பின்னணியில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading