பாஜகவின் புதிய தலைவர் யார்? இன்று அனைத்து மாநில தலைவர்களின் கூட்டம்!

16-ம் தேதி டெல்லியில் பாஜகவின் செயற்குழுக் கூட்டமும், 18-ம் தேதி பொதுச்செயலாளர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: June 13, 2019, 9:58 AM IST
பாஜகவின் புதிய தலைவர் யார்? இன்று அனைத்து மாநில தலைவர்களின் கூட்டம்!
அமித் ஷா
Web Desk | news18
Updated: June 13, 2019, 9:58 AM IST
பாஜகவுக்கு புதிய தலைமை யார்? என்பது குறித்து அனைத்து மாநில பாஜக தலைவர்களுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் விரைவில் நடைபெறவுள்ள மகாராஷ்டிரா, பீகார், அரியானா, ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

17-வது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து புதிய பொறுப்புகள் பிரித்து அளிக்கப்படும் வரை பாஜகவின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கப் போவதில்லை என்று 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் முடிவெடுத்திருந்தது பாஜக.

அதனால், அமித் ஷாவின் பொறுப்புகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற அமித் ஷா புதிய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதனால், பாஜகவின் புதிய தலைவர் யார்? என்ற கேள்வி கட்சிக்குள் நிலவி வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அனைத்து மாநில பாஜக தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜே.பி. நட்டாவிடம் உத்திரபிரதேசத்தின் தேர்தல் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டதும், அதில் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு 62 தொகுதிகளை கைப்பற்றி தந்ததும் பெரிதாக பார்க்கப்பட்டது.

அதே சமயத்தில், அமித் ஷாவின் பதவிக்காலம் முடிவடையுள்ள அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை இடைக்காலத் தலைவர் நியமிக்கவும், அதற்கு பின்னர் புதிய தலைவரை தேர்வு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில், விரைவில் நடைபெற உள்ள மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா, ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

மேலும், டிசம்பர் மாதத்திற்குள் மாநில வாரியாக பாஜக தலைவர்களுக்கான பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படலாம் என்பதால், அதுதொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரக்ளை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், உள்ளாட்சி சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற யூகங்களை அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கிடையே, வரும் 16-ம் தேதி டெல்லியில் பாஜகவின் செயற்குழுக் கூட்டமும், 18-ம் தேதி பொதுச்செயலாளர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... அதிமுக 50 சர்ச்சைகள் தெரியுமா?

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...