Home /News /national /

உ.பி சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. யோகி ஆதித்யநாத் எங்கு போட்டி?..

உ.பி சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. யோகி ஆதித்யநாத் எங்கு போட்டி?..

Uttar Pradesh Assembly election: உ.பியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 58 தொகுதிகளில், 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

     உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்தநிலையில் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 58 தொகுதிகளில், 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

    அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 55 தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது. இதில் கோரக்பூர் தொகுதியில் இருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார்.

    Also read:  ஒரே ரன்வேயில் 2 இந்திய விமானங்கள்.. நூலிழையில் விபரீதம் தவிர்ப்பு - துபாய் விமான நிலையத்தில் திக் திக்..

    துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா, சிரது தொகுதியில் களம் காண்கிறார். இதேபோல சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் தங்களது முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டுள்ளன.

    இதில் உன்னாவ் நகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய பெண்ணின் தாய்க்கு காங்கிரஸ் சார்பில் சீட் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 125 வேட்பாளர்களையும், சமாஜ்வாதி 29 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது,

    Also read:   ‘என்ன வச்சு காமெடி பன்னிட்டாங்க..’ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கதறி அழுத அரசியல் கட்சி பிரமுகர்!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: BJP, Uttar pradesh, Yogi adityanath

    அடுத்த செய்தி