Home /News /national /

லதா மங்கேஷ்கர் மறைவு: உ.பி. தேர்தல் அறிக்கை வெளியீட்டை தள்ளிவைத்த பாஜக!

லதா மங்கேஷ்கர் மறைவு: உ.பி. தேர்தல் அறிக்கை வெளியீட்டை தள்ளிவைத்த பாஜக!

 லதா மங்கேஷ்கர் மறைவுக்கு அமித் ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு அமித் ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு அமித் ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

    பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவு காரணமாக இன்று நடப்பதாக இருந்த உத்தரப் பிரதேச தேர்தல் அறிக்கை வெளியீட்டை பாஜக தள்ளிவைத்துள்ளது.

    இந்திய சினிமாவில் பல மொழிகளில் இன்றும் ரசிக்கும் படியான பல நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ள பிரபல பாடிகியான லதா மங்கேஷ்கர் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்டவர். பழம் பெரும் பாடகியான இவர் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், நேற்று மாலை மீண்டும் மோசமானது. தொடர்ந்து, இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.

    லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்... மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

    லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும், இதன் போது இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிர அரசு சார்பில் லதா மங்கேஷ்கருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இன்று மாலை 6.30 மணிக்கு சிவாஜி பூங்காவில் அரசு சார்பில் இறுதி சடங்குகள் நடத்தப்படவுள்ளன.

    முன்னதாக லக்னோவில் இன்று மத்திய அமைச்சரும் உ.பி. தேர்தல் பொறுப்பாளருமான அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேஷவ் மவுரியா ஆகியோரின் தலைமையில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதாக இருந்தது. ஆனால், லதா மங்கேஷ்கர் மறைவை ஒட்டி இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு அவரது மறைவுக்கு அமித் ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

    உ.பி.யில் முதல் கட்டமாக 58 தொகுதிகளில் வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. களத்தில் 615 வேட்பாளர்கள் உள்ளனர். முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் அறிக்கை வெளியீட்டை பாஜக தள்ளிவைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இதையும் படியுங்கள் : மாற்று திறனாளி நபரை பணிக்கு அமர்த்தி வாக்குறுதியை காப்பாற்றிய ஆனந்த் மஹிந்திரா.! பாராட்டும் நெட்டிசன்கள்

    இது குறித்து உ.பி. பாஜக தலைவர் ஸ்வதந்திரா தேவ் சிங் கூறுகையில், "லதா மங்கேஷ்கரின் மறைவு வேதனையளிக்கிறது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக உ.பி. தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டைத் தள்ளிவைக்கிறோம். புதிய வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று கூறினார்.

    இதேபோல், கோவாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருந்த காணொளி பேரணி உட்பட, பாஜக அதன் பிற அரசியல் திட்டங்களையும் நிறுத்தி வைத்துள்ளது.

    பாடகி லதா மங்கேஷ்கரின் மரணத்தைத் தொடர்ந்து கோவா பாஜக பிரதமர் பேரணி மற்றும் பிற முக்கிய கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது என்று முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: BJP, Uttar pradesh

    அடுத்த செய்தி