திப்பு சுல்தான் விழாவை ரத்து செய்த கர்நாடக பா.ஜ.க அரசு! அதிருப்தி தெரிவித்த காங்கிரஸ்

விராஜ்பெட் எம்.எல்.ஏ கேஜி போபையா எடியூரப்பாவுக்கு திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார்.

news18
Updated: July 30, 2019, 10:20 PM IST
திப்பு சுல்தான் விழாவை ரத்து செய்த கர்நாடக பா.ஜ.க அரசு! அதிருப்தி தெரிவித்த காங்கிரஸ்
திப்பு சுல்தான்
news18
Updated: July 30, 2019, 10:20 PM IST
திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படாது என்று பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகா மாநில எல்லைக்குள் வரும் மைசூரு பகுதியில் 1700 காலகட்டத்தில் ஆட்சி செய்த அரசர் திப்புசுல்தான். அவருடைய ஆட்சிக் காலத்தில் பல நல்ல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து வருடந்தோறும் நவம்பர் மாதம் 10-ந்தேதி திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது, எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க அரசு அமைந்துள்ள நிலையில், திப்பு ஜெயந்தி விழா ரத்து செய்யப்படுகிறது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விராஜ்பெட் எம்.எல்.ஏ கேஜி போபையா எடியூரப்பாவுக்கு திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


2015-ம் ஆண்டு திப்பு சுல்தானுக்கு அரசு விழா கொண்டாடப்படும் என்று காங்கிரஸ் அரசுவித்தபோது, அதற்கு எதிராக பா.ஜ.க மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது. அந்தப் போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியது. இதில் விஷ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க திப்பு சுல்தானை, ஒரு கொடூரன் என்று வர்ணித்துவருகிறது.

திப்பு சுல்தான் விழாவை ரத்து செய்தது குறித்த முன்னாள் முதல்வர் சித்தராமையா ட்விட்டர் பதிவில், ‘திப்பு ஜெயந்தி கொண்டாடுவதை நிறுத்தம் முடிவு மிகப் பெரிய தவறு. சிறுபான்மையினர் என்பதால், திப்புவுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. அவர் ஆங்கிலேயருக்கு எதிராக வீரமாகப் போரிட்டதற்கும், வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்ததற்குதான்’என்று பதிவிட்டுள்ளார்.

Also see:

Loading...

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...