Home /News /national /

திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் எதிர்கட்சிகளை துவம்சம் செய்தது பாஜக - அனைத்து மாநகராட்சிகளிலும் வெற்றி

திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் எதிர்கட்சிகளை துவம்சம் செய்தது பாஜக - அனைத்து மாநகராட்சிகளிலும் வெற்றி

BJP Tripura

BJP Tripura

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் அம்பாசா நகராட்சியில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

திரிபுரா மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மலைக்க வைக்கும் வெற்றியை பதிவு செய்து எதிர்கட்சிகளை துவம்சம் செய்துள்ளது. மொத்தம் உள்ள 14 நகராட்சிகளையும் பாஜக கைப்பற்றுகிறது.

வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான திரிபுராவில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 20 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி ஆட்சியில் அமர்ந்தது பாஜக. முன்னதாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒரு சீட் கூட வெற்றி பெற்றிராத பாஜக திரிபுராவில் ஆட்சியை பிடித்தது அரசியல் அரங்கை புரட்டிப் போட்டது.

பாஜக ஆட்சி 3 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் 2023-ல் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கோடு திரிபுரா அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் பம்பரமாக சுற்றி பணியாற்றி வருகிறது.

Also read:  காங்கிரஸ் அழைப்பை நிராகரிக்கும் மம்தா பானர்ஜி: ஒற்றுமையில்லாத எதிர்க்கட்சிகள்..

இதனிடையே அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் திரிபுரா உள்ளாட்சித் தேர்தல் கடந்த நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்றது. 14 மாநகராட்சிகளுக்கும், 6 நகராட்சி அமைப்புகளுக்கும் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தம் 324 பதவியிடங்கள் உள்ளன. இவற்றில் 112 இடங்களில் போட்டியே இல்லாமல் ஏற்கனவே பாஜக வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில் மிச்சம் உள்ள 222 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
81.54 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.

உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. வாக்கு எண்ணிக்கையில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் இருந்து வந்தது. மதியத்திற்கு பிறகு கிடைத்துள்ள தகவலின்படி பாஜக இத்தேர்தலில் எதிகட்சிகளுக்கே வாய்ப்பே விட்டுக்கொடுக்காமல் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் உள்ள 222 இடங்களில் 217 இடங்களில் பாஜக அமோக வெற்றியை பெற்றிருக்கிறது. மிச்சம் உள்ள 5 இடங்களில் மட்டுமே எதிர்கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

Also read:    உகாண்டாவிடம் வேலையைக் காட்டிய சீனா: ஒரே விமான நிலையமும் பறிபோகும் அபாயம்..

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் அம்பாசா நகராட்சியில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. சிபிஐ (எம்) 3 இடங்களிலும், காங்கிரஸில் இருந்து விலகி பிரத்யோத் கிஷோர் தொடங்கிய TIPRA Motha கட்சிக்கு ஒரு இடத்திலும் வெற்றி கிடைத்திருக்கிறது.

திரிபுராவின் தலைநகரான அகர்தலா மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 இடங்களையும் பாஜக கைப்பற்றியிருக்கிறது. தர்மநகர் நகராட்சி (25), தெலியமுரா நகராட்சி (15), அமர்பூர் நகர் (13), கோவாய் நகராட்சி (15), பெலோனியா (17, சம்ரூம் நகர் (9), குமர்காத் (15) நகராட்சிகளை பாஜக முற்றாக கைப்பற்றியிருக்கிறது. இங்கு எதிர்கட்சிகளால் ஒரு உறுப்பினரை கூட பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அக்கட்சியினர் இதனை கொண்டாடி வருகின்றனர். மேலும் பிரதமர் மோடியின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி என பாஜக தலைவர்கள் கூறினர்.
Published by:Arun
First published:

Tags: BJP, Tripura

அடுத்த செய்தி