அகிலேஷ்க்கு நடிகர்: சோனியாவுக்கு முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி - பாஜகவின் மாஸ்டர் பிளான்

பா.ஜ.க சார்பில் உத்தரப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலுள்ள 6 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அகிலேஷ்க்கு நடிகர்: சோனியாவுக்கு முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி - பாஜகவின் மாஸ்டர் பிளான்
சோனியா காந்தி
  • News18
  • Last Updated: April 3, 2019, 9:38 PM IST
  • Share this:
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு எதிராக பா.ஜ.க சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கிவரும் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில், பா.ஜ.க சார்பில் உத்தரப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலுள்ள 6 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பா.ஜ.க சார்பில் தினேஷ் பிரதாப் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் அசம்கர் தொகுதியில் அவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் போஜ்புரி நடிகர் மற்றும் பாடகரான தினேஷ் லால் யாதவ்வும் முலாயம் சிங் போட்டியிடும் மெயின்புரி தொகுதியில் அவரை எதிர்த்து பிரேம் சிங் ஷக்யாவும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்