• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பீகாரில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் - பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

பீகாரில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் - பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

பிதமர் மோடி - நித்திஷ் குமார்

பிதமர் மோடி - நித்திஷ் குமார்

பீகாரில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

  • Share this:
    பீகார் சட்டமன்றத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 3ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் அந்த தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவடைகிறது.

    இதையொட்டி சாப்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்பதை முதல் கட்டத் தேர்தல் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இதனால் எதிர்க்கட்சிகள் விரக்தியடைந்துள்ளதாகவும் கூறினார்.



    புல்வாமா தாக்குதலின்போது தேசத்தை தவறாக வழிநடத்தியவர்கள் தற்போது மக்களிடம் வாக்கு கேட்டு வருவதாகவும், அவர்களைப் புறக்கணிக்குமாறும் மோடி கேட்டுக் கொண்டார்.

    பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்று கூறிய மோடி, சமீபத்தில் செஷல்ஸ் அதிபராகப் பொறுப்பேற்ற இந்திய வம்சாவழியைச் சேர்ந்த வேவல் ராம்கலவனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: