பிரியங்கா முகத்திற்கு பதிலாக மம்தா பானர்ஜி முகம்! மீம்ஸ் போட்ட பா.ஜ.க பெண் நிர்வாகி கைது

யோகிபாபுவுக்கு பெண் வேடம் போட்டது உள்ளது இருந்தது பிரியாங்காவின் கெட்டப் என்று நெட்டிசன் பலர் கேலி செய்தனர்.

Vijay R | news18
Updated: May 11, 2019, 5:22 PM IST
பிரியங்கா முகத்திற்கு பதிலாக மம்தா பானர்ஜி முகம்! மீம்ஸ் போட்ட பா.ஜ.க பெண் நிர்வாகி கைது
மார்ஃப் செய்யப்பட்ட படம்
Vijay R | news18
Updated: May 11, 2019, 5:22 PM IST
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் முகத்தில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தை வைத்து மார்ஃப் செய்து வெளியிட்ட பாஜக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த எம்.இ.டி. காலா 2019 நிகழ்ச்சிக்கு வித்தியாசமான கெட்டப்பில் வந்த பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்தனர்.யோகிபாபுவுக்கு பெண் வேடம் போட்டதுபோல இருந்தது பிரியாங்காவின் கெட்டப் என்று நெட்டிசன் பலர் கேலி செய்தனர். அவரது உடை, காதணிகள் உட்பட அனைத்தையும் கேலி செய்தனர். அவருடைய அந்த கெட்டப்பை பலருடன் இணைத்து பல மீம்ஸ்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் மேற்குவங்கந்தைச் சேர்ந்த பா.ஜ.க பெண் நிர்வாகி ஒருவர், அந்த புகைப்படத்தில் பிரியங்கா சோப்ராவின் முகத்தை அகற்றி விட்டு, மம்தா பானர்ஜியின் முகத்தை பொருத்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அறிந்த மேற்கு வங்க காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பா.ஜ.க பெண் நிர்வாகியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Watch

;
First published: May 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...