மேற்கு வங்கத்தின் முகம் மாறுகிறதா? மம்தா பானர்ஜி நிலத்தில் சாதித்த பா.ஜ.க

பா.ஜ.கவைப் பொறுத்தவரை கடந்தமுறை நாடு முழுவதும் மோடி அலை வீசிய நிலையில், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

news18
Updated: May 23, 2019, 11:32 AM IST
மேற்கு வங்கத்தின் முகம் மாறுகிறதா? மம்தா பானர்ஜி நிலத்தில் சாதித்த பா.ஜ.க
மோடி
news18
Updated: May 23, 2019, 11:32 AM IST
மேற்கு வங்க மாநிலத்தில் 18 தொகுதிகளில் முன்னிலை பெற்று பா.ஜ.க மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வலுவான கட்சியா இருந்துவருகிறது. பா.ஜ.கவைப் பொறுத்தவரை கடந்தமுறை நாடு முழுவதும் மோடி அலை வீசிய நிலையில், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தமுறை பா.ஜ.க கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என்றும் கணிசமான தொகுதிகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தற்போதுவரை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் முன்னிலையில், காங்கிரஸ் 1 தொகுதிகளில் மட்டும் முன்னிலையில் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலமாக இருந்த மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதிகளில் கூட முன்னிலை பெற முடியாத நிலையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Loading...
Also see:
First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...