Home /News /national /

தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக எபிவிபி நாடு தழுவிய போராட்டம்.. சென்னையில் பலர் கைது

தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக எபிவிபி நாடு தழுவிய போராட்டம்.. சென்னையில் பலர் கைது

எபிவிபி போராட்டம்

எபிவிபி போராட்டம்

  திரிபுரா,  இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, அந்தமான் நிக்கோபர், காஷ்மீர், உத்தரப் பிரதேசம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ABVP அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி வேண்டும் என்று கூறி பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ABVP) இன்று நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுத்தது.

    தஞ்சையை சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மதமாற்றம் இருப்பதாக பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. எனினும், மாணவி தற்கொலைக்கு மதம் காரணம் இல்லை என்று பள்ளி தரப்பிலும், அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மாணவி மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சிபிஐக்கு மாற்றியுள்ளது.

    இந்நிலையில், பாஜகவின் மாணவர் அமைப்பான Akhil Bharatiya Vidyarthi Parishad-ABVP தஞ்சை மாணவி இறப்பிற்கு நீதி கேட்டு இன்று நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுத்தது. சென்னையில் நேற்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட  எபிவிபி அமைப்பின் தேசிய பொது செயலாளர் நிதி திரிபதி உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

     

    இதனை கண்டித்தும் தஞ்சை மாணவி தற்கொலைக்கு நீதி வேண்டியும்,  திரிபுரா,  இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, அந்தமான் நிக்கோபர், காஷ்மீர், உத்தரப் பிரதேசம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் சியோன் சர்க்கிளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: ABVP, Protest, Suicide

    அடுத்த செய்தி