மத்தியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: நவின் பட்நாயக்

ஒடிசா நிலக்கரி துறையிலிருந்து ஆயிரம் கணக்கில் வருவாய் பெறும் மத்திய அரசு தங்களுக்குக் காற்று மாசு மற்றும் தூசியை மட்டுமே திருப்பி அளிக்கிறது.

Tamilarasu J | news18
Updated: March 25, 2019, 12:25 PM IST
மத்தியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: நவின் பட்நாயக்
நவீன் பட்நாயக்
Tamilarasu J | news18
Updated: March 25, 2019, 12:25 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று ஒடிசா முதலமைச்சரும், பிஜு ஜனதா தள தலைவருமான நவின் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நவீன் பட்நாயக், “மத்திய அரசு தொடர்ந்து ஒடிசாவை வஞ்சித்து வருகிறது. அத்தகைய சூழலில் ஆட்சி அமைப்பது யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக தங்கள் கட்சி திகழும்.

ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 2014 தேர்தலில் தங்கள் கட்சி 21 மக்களவைத் தொகுதிகளில் 20-ஐ வென்றது. சட்டப்பேரவைத் தேர்தலில் 147 தொகுதிகளில் 117-ஐ கைப்பற்றியது.

2014 தேர்தலின் போது ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதை மத்திய அரசு நிராகத்துவிட்டது.

ஒடிசா நிலக்கரி துறையிலிருந்து ஆயிரம் கணக்கில் வருவாய் பெறும் மத்திய அரசு தங்களுக்குக் காற்று மாசு மற்றும் தூசியை மட்டுமே திருப்பிக் கொடுக்கிறது.

மேலும், ரயில்வே துறையிலும் ஒடிசா மாநிலம் புறக்கணிக்கப்படுகிறது” என்றும் நவீன் பட்நாயக் பாஜகவைக் குறைகூறினார்.

மேலும் பார்க்க:
Loading...
First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...