சாதனை நாயகன் நவின் பட்நாயக்! ஐந்தாவது முறையாக முதல்வராக பதவியேற்கும் நவின்பட்நாயக்

2004-ம் ஆண்டு 61 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிஜூ ஜனதா தளம், 2009-ம் ஆண்டு 103 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 117 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது.

news18
Updated: May 23, 2019, 3:52 PM IST
சாதனை நாயகன் நவின் பட்நாயக்! ஐந்தாவது முறையாக முதல்வராக பதவியேற்கும் நவின்பட்நாயக்
நவின் பட்நாயக்
news18
Updated: May 23, 2019, 3:52 PM IST
ஒடிசாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நவின் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் 102 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதன்மூலம், நவின்பட்நாயக் ஐந்தாவது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. ஒடிசாவில் மொத்தம் 147 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

அதில், 74 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கலாம். நவின் பட்நாயக், 2000-ம் ஆண்டிலிருந்து ஒடிசா மாநில முதல்வராக இருந்துவருகிறார். ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும், அவருடைய கட்சி வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. 2004-ம் ஆண்டு 61 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிஜூ ஜனதா தளம், 2009-ம் ஆண்டு 103 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 117 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது.

நவின் பட்நாயக்கின் எளிமையும் நிர்வாகத் திறனும் மக்களிடையை மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவருடைய தொடர் வெற்றிக்கு காரணம் அதுதான். இருப்பினும், இந்தமுறை பா.ஜ.க கடும் நெருக்கடி கொடுக்கும் என்று கணிக்கப்பட்டது. இருப்பினும், கணிப்புகளைக் கடந்து நவின் பட்நாயக் ஐந்தாவது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்தமுறை நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பிஜூ ஜனதா தளம் 102 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க 30 தொகுதிளிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

ஓடிசாவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நவின் பட்நாயக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ஒடிசாவில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள நவின் பட்நாயக்குக்கு வாழ்த்துகள். அடுத்து வரவுள்ள ஆட்சிக்காக வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்.
First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...