• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வருடத்தில் ஒரு வாரம் மட்டுமே திறக்கப்படும் அபூர்வ கோவில்.. விநோத வேண்டுதல்களுடன் உண்டியலில் கிடந்த கடிதங்கள்...

வருடத்தில் ஒரு வாரம் மட்டுமே திறக்கப்படும் அபூர்வ கோவில்.. விநோத வேண்டுதல்களுடன் உண்டியலில் கிடந்த கடிதங்கள்...

Hasanamba temple

Hasanamba temple

தனது வேண்டுதல் என்னவென குறிப்பிடாமல், தன் பிரச்னையை தீர்த்தால் 5,000 ரூபாய் காணிக்கை செலுத்துவதாக கூறியிருக்கிறார் ஒருவர். தன்னுடைய காதலனை கரம் பிடிக்க வேண்டுமென ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார் பெண் ஒருவர்.

  • Share this:
வருடத்திற்கு ஒரு வாரம் மட்டுமே திறக்கப்பட்டு வழிபாடு நடக்கும் ஒரு பிரசித்தி பெற்ற திருக்கோவிலின் இந்த ஆண்டு தரிசனம் முடிந்து உண்டியல் திறக்கப்பட்ட நிலையில், அதில் விநோத வேண்டுதல்களுடன் இருந்த கடிதங்கள் தற்போது வைரலாக பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

கர்நாடக மாநிலத்தின் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹசனம்பா திருக்கோவில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் மிகவும் பழமைவாய்ந்த ஒரு கோவில் ஆகும். சக்தி (அம்பாள்) திருத்தலமான இக்கோவிலில் மிகவும் நூதன முறையிலான ஒரு நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எல்லா கோவில்களுமே அனைத்து நாட்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது தான் வழக்கம், ஆனால் இந்த கோவில் இதற்கு மாறாக ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டியையின் போது மட்டும் ஒரு வாரம் மட்டுமே திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் பிற அனைத்து நாட்களிலும் இக்கோவில் பூட்டப்பட்டே இருக்கும்.

கோவில் பூட்டப்படும் முன் அம்மனுக்கு அருகே நெய் விளக்கு ஒன்று ஏற்றப்பட்டு, தண்ணீரும், சமைக்கப்பட்ட அரிசி சாதமும் படைக்கப்படும். ஆனால் கோவில் திறக்கப்படும் போது இந்த நெய் விளக்கு அணையாமலும், சாதம் கெட்டுப்போகாமல் சூடாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சிறப்பினால் இக்கோவில் மிகவும் பிரசித்து பெற்று விளங்குகிறது, மேலும் ஹசன் மாவட்டத்தின் பெயரும் கூட இக்கோவிலின் பெயராலேயே பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இக்கோவிலில் பல அதிசயங்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

Also read:   ரூ.4.99 லட்சத்தில் அடுத்த தலைமுறை மாருதி செலரியோ.. இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் அறிமுகம்

இந்த வருடத்தின் பூஜைக்காக ஹசனம்பாள் கோவில், கடந்த அக்டோபர் 28 முதல் நவம்பர் 6 வரை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கோவில் பூட்டப்பட்டது. இதனிடையே கோவில் திறக்கப்பட்டிருந்த நாட்கள் வைக்கப்பட்டிருந்த உண்டியலை கோவில் நிர்வாகம் திறந்தது. அதில் இருந்த பணத்தை விட விநோத கோரிக்கைகள், வேண்டுதல்களுடன் கடிதங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த கடிதங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன..

Holenarasipura சட்டமன்ற தொகுதியை எப்படியாவது காப்பாற்றுங்கள். எங்களுக்கு புதிய எம்.எல்.ஏ கிடைக்கச் செய்ய வேண்டும். ஹெச்.டி.ரேவண்ணாவும் அவரின் குடும்பத்தாரும் ரத்தத்தை உறிஞ்சுபவர்கள். எதிர்வரும் தேர்தலில் அவரின் குடும்பத்தார் தோல்வியடைய வேண்டும் என ஒருவர் அம்மனிடம் வேண்டி கடிதம் எழுதியுள்ளார். (ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனாவார்)

Also read:   கன்னியாகுமரியைச் சேர்ந்த தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்போகும் போப் பிரான்சிஸ்

10ம் வகுப்பு தேர்வில் தன் மகன் 90% மார்க்குகள் பெற வேண்டும் என தாயார் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார். ஒருவர் தனது மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் எனவும் எழுதியுள்ளார். அட இதெல்லாம் கூட வழக்கமான வேண்டுதல்கள் என விட்டுவிடலாம்.

ஹசன் மாவட்டத்தின் 35வது வார்டில் இருக்கும் தனது வீட்டின் அருகேயிருக்கும் சாலை பள்ளம் சரிசெய்ய கடவுளிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் ஒருவர். மற்றொரு பக்தரோ தனது வேண்டுதல் என்னவென குறிப்பிடாமல், தன் பிரச்னையை தீர்த்தால் 5,000 ரூபாய் காணிக்கை செலுத்துவதாக கூறியிருக்கிறார். காதலி ஒருவர் தன்னுடைய காதலனை கரம் பிடிக்க வேண்டுமென ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.

இது போன்ற கடிதங்கள் தற்போது கர்நாடக மாநிலத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: