• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • கர்நாடக அரசியலை உலுக்கும் பிட்காயின் மோசடி!

கர்நாடக அரசியலை உலுக்கும் பிட்காயின் மோசடி!

கர்நாடக பிட்காயின் மோசடி

கர்நாடக பிட்காயின் மோசடி

பிட்காயின் மோசடி விவகாரத்தில் தனது முதலமைச்சர் பதவியை பசவராஜ் பொம்மை இழக்க நேரிடும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே விமர்சித்துள்ளார். தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கர்நாடக அரசியலில் பிட்காயின் மோசடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிட்காயின் மோசடியில் முதலமைச்சர்  பசவராஜ் பொம்மை மீது காங்கிரஸார் சந்தேகம் எழுப்பியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  கர்நாடகாவில் அரசு வலைதள பக்கங்களை ஹேக் செய்ய முயன்றது, டார்க் வெப் மூலம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவது, அதற்கு கிரிப்டோ கரன்ஸியில் பணம் பெறுவது போன்ற புகாரில் ஹேக்கர் ஸ்ரீகிரிஷ்ணா என்கிற ஸ்ரீகி(Sriki) என்பவரை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் பறிமுதல் செய்யப்பட்டது.

  பிட்காயின் விவகாரத்தில்  அரசியல் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்க் கார்கே (Priyank Kharge), பிட்காயின் மோசடி விவகாரத்தில் பசவராஜ் பொம்மை தனது பதவியை இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டார்.

  இந்த அரசாங்கம் பிட்காயின் ஊழலை மிகவும் திட்டமிட்டு மூட முயற்சிக்கிறது. இதில் பா.ஜ.க மூத்த தலைவர்கள், அவர்களின் பிள்ளைகள், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.... பல கோடி ஊழல், போதைப்பொருள் வழக்கு லஞ்சம், டிரான்ஸ்பர் லஞ்சம் பிட்காயின் மூலம் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலீட்டு மோசடிகளும் நடந்துள்ளன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

  இதையும் படிங்க: விவசாயச் சட்டங்களை விமர்சித்த வருண் காந்தி, பாஜக நியமித்த ஆளுநர் தேச துரோகிகளா?- சந்திரசேகர ராவ் ஆவேசம்


  கர்நாடகாவில் பாஜகவின் கடந்த ஆட்சியின்போது மூன்று முறை முதலமைச்சர்கள் மாறினார்கள், இந்த முறை எடியூரப்பாவை தொடர்ந்து பசவராஜ் பொம்மை முதலமைச்சர் பதவியில் உள்ள நிலையில், அவரும் மாறக்கூடும் என்று பிரியங்க் கார்கே தெரிவித்தார்.

   

  இதனிடையே, பிட்காயின் மோசடியில் காங்கிரஸ் தலைவர்கள் பெயரும் இடம்பெற்றுள்ளதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.  இந்த மோசடி தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆதாரங்களை தந்தால் விசாரிக்க தயாராகவே உள்ளோம். மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

  இதை படிக்க: ஆப்கானிஸ்தான் விவகாரம்: தவிர்த்த பாகிஸ்தான்,சீனா... டெல்லியில் விவாதிக்கப்பட்டது என்ன?


  முதல்வரின் குற்றச்சாட்டு குறித்து  பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா, பிட்காயின் முறைகேட்டில் கட்சிகளை தாண்டி இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் யார் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும். பிட்காயின் விவகாரத்தில் காங்கிரசாருக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். காங்கிரசாருக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் யார் என்பதை கூற வேண்டும். அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. அரசை நடத்துகிறவர்கள் யார்?.

  போலீஸ் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது. விசாரணை அமைப்புகள் யாருடைய உத்தரவின் கீழ் செயல்படுகின்றன.   இந்த விஷயத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தப்பிக்கும் வகையில் கருத்துக்களை கூறுகிறார். அவர் கட்டுப்பாட்டில்தான் போலீசார் உள்ளனர். எனவே, அவர்தான் பொறுப்பு என குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க: யமுனையில் ரசாயன கழிவு: தெர்மாகோல் பாணியில் டெல்லி அரசு!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Murugesh M
  First published: